உளவுத்துறை கண்காணிப்பில் உலகநாயகனின் ஸ்பான்சர்ஸ்! வேட்டு வைக்க லிஸ்ட் கேட்ட எடப்பாடி!?

First Published Mar 16, 2018, 2:53 PM IST
Highlights
Sponsors of the kamal intelligence surveillance


கமல்ஹாசன் அரசியல் அறிவிப்பு மிகுந்த ஆரவாரத்திற்கு நடுவே நடைபெறுகிறது. கடந்த சில நாட்களாகவே கமல் நடவடிக்கைகள் பரபரப்பின் உச்சம் தொட்டன. மதுரை, ஒத்தகடை பகுதியில் கட்சிக்குப் பெயர் கட்சிக் கொடியை அறிமுகம் செய்து அதகளப்படுத்தினார்.

கமலின் இந்த அதிரடி அரசியல் என்ட்ரியால் திமுக மற்றும் அதிமுக வட்டாரத்தில் தடதடப்பு ஏற்பட்டது. ராமேஸ்வரத்தில் இருந்து தற்போது சுற்றுப்பயணத்தை தொடங்கிய கமலுக்கு ராமேஸ்வரம் பேக்கரும்பு பகுதியிலுள்ள அப்துல் கலாம் நினைவிடம் சென்றார்.

அங்கு கூட்டம் பெரிய அளவில் இருந்தது. இங்குதான் லட்சக்கணக்கில் அவருக்கு மக்கள் வரவேற்பு கொடுத்தார்கள். தரையில் கூட கால் வைக்க முடியாத அளவுக்கு கூட்டம் கூடியது. அதேபோல ராமேஸ்வரத்தில் அவர் பேசுவதை கேட்கவும் கூட்டம் பெரிய அளவில் கூடியது.

முதல் மாநாட்டிற்கு பெரிய அளவில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. கமல் எதிர்பார்த்ததைவிட கூட்டம் களைகட்டியது. கமலின் முதல் மாநாடு மக்கள் வெள்ளத்தால் அதிர்ந்தது.

இதனையடுத்து கட்சியின் பெயர் கொடி என அதகளமாக அரசியல் என்ட்ரி கொடுத்த கமல் என்னதான் ''வாக்குக்கு காசு கொடுக்க மாட்டோம், மக்கள் நீதி மய்யம் விலை போகாது. கட்சியின் திட்டங்கள் மாறினாலும், கொள்கைகள் மாறாது என கொள்கை முழக்கமிட்டாலும் ஆளும் அரசும், எதிர்கட்சியும் விடுவதாக இல்லை.

கமலுக்கு அரசியல் கட்சி தொடங்க யார் நிதிவுதவி செய்கிறார்கள். அவர் தூண்டிவிடுவது யார்? இப்படி ஆக்டிவாக இருக்க அமௌன்ட்டை இறக்குவது யார்? மக்கள் இப்படி நாளுக்கு நாள் களைகட்ட காரணம் என்ன? என குழம்பிய ஆளும் கட்சி தொடர்ந்து கண்காணித்து வருகிறதாம்.

இதன் முதல்கட்டமாக, கமலை கண்காணித்த உளவுத்துறை ஒரு ரிபோர்ட்டை எடப்பாடியிடம் கொடுத்திருக்கிறது. கமல் கட்சியில் தற்போது ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள தொழிலதிபர்கள் சிலர் இணைந்துள்ளார்களாம். இன்னும் சிலர் மறைமுகமாக அவருக்கு உதவி செய்துவருகிறார்களாம்.

சென்னையைச் சேர்ந்த மிகப் பெரிய தொழிலதிபர் ஒருவர் அடிக்கடி கமல் வீட்டுக்கு வருவதும் போவதுமாக கமலுக்கு மிக நெருக்கமாக இருக்கிறாராம். அதுமட்டுமல்ல தமிழகத்தில் இருக்கும் முக்கியமான தொழிலதிபர்களை மக்கள் நீதி மய்யத்துக்கான ஸ்பான்சர்களை கமலுக்கு அறிமுகபடுத்துகிறாராம் அந்த தொழிலதிபர்.

இந்த உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பின் உச்சத்துக்கே சென்ற எடப்பாடி  இப்படி கமலுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் உதவும் தொழிலதிபர்கள் பட்டியலை எடுத்து, அவர்களின் வருமானம், அதற்கான வரி கட்டுதல் எல்லாம் சரியாக இருக்கிறதா என விசாரிக்கச் சொல்லி உத்தரவிட்டுள்ளாராம்.

அப்படிச் சரியாக இல்லாத பட்சத்தில் அவர்கள் மீது அடுத்த கட்டமாக வேட்டு வைக்க பக்கா ஸ்கெட்ச் தயாராக இருக்கிறதாம்.

click me!