இதுக்குதான் அந்தர்பல்டி அடித்தாரா ஜக்கையன் எம்.எல்.ஏ? - விளக்கம் சொல்கிறார்  சபாநாயகர்...!

Asianet News Tamil  
Published : Sep 18, 2017, 09:50 PM ISTUpdated : Sep 19, 2018, 01:11 AM IST
இதுக்குதான் அந்தர்பல்டி அடித்தாரா ஜக்கையன் எம்.எல்.ஏ? - விளக்கம் சொல்கிறார்  சபாநாயகர்...!

சுருக்கம்

Speaker Dhanapal said that the MLA has sent a letter to the governor against the Chief Minister and he has taken action on the other 18 people as he has said in his reply.

முதலமைச்சருக்கு எதிராக வற்புறுத்தி எம்.எல்.ஏ ஜக்கையனை ஆளுநரிடம் கடிதம் கொடுக்க வைத்துள்ளதாலும் அதை அவரே பதில் மனுவில் கூறியிருப்பதால் மற்ற 18 பேர் மீது நடவடிக்கை எடுத்ததாகவும் சபாநாயகர் தனபால் விளக்கம் அளித்துள்ளார். 

எடப்படி அணியும் ஒபிஎஸ் அணியும் இணைந்து சசிகலா மற்றும் டிடிவி தினகரனை கட்சியில் இருந்து நீக்குவதாக அறிவித்தது.

இதனால் ஆத்திரமடைந்த டிடிவி தரப்பு எம்.எல்.ஏக்கள் 19 பேர் ஆளுநரிடம் முதலமைச்சர் எடப்பாடிக்கு எதிராக மனு அளித்தனர். 

ஆனால் உட்கட்சி விவகாரத்தில் தாம் ஒன்றும் செய்ய முடியாது என கூறி ஆளுநர் கையை விரித்தார். 
இதனால் டிடிவி எம்.எல்.ஏக்கள் தனி அணியாக செயல்பட்டு வந்தனர். எடப்பாடி அணி எவ்வளவோ தங்களிடம் வந்து விடுமாறு வலியுறுத்தினர். 

டிடிவி அணி வளைந்து கொடுக்கவில்லை. இதனால் சபாநாயகர் டிடிவி அணிக்கு எதிராக நோட்டீஸ் அனுப்பினார். ஆனால் முறையான பதிலை தர டிடிவி தரப்பு தவறிவிட்டது. 

எடப்பாடியின் நடவடிக்கையை கண்டு டிடிவி அணி எம்.எல்.ஏக்கள் நீதிமன்றம் வரை சென்றனர். ஆனால் சாதகமான தீர்ப்பு வரவில்லை. 

இதனால் சுதாரித்து கொண்ட எம்.எல்.ஏ ஜக்கையன் மீண்டும் எடப்பாடி அணிக்கு தாவினார். டிடிவி தரப்பினர் திமுகவுக்கு சாதகமாக செல்கின்றனர் எனவும் தன்னை வற்புறுத்தியே புகார் மனு அளிக்க வைத்தனர் எனவும் சபாநாயகரிடம் பதில் அளித்தார். 

இதையடுத்து சபாநாயகர் இன்று ஜக்கையனை தவிர மற்ற 18 எம்.எல்.ஏக்களும் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார். 

இந்நிலையில், சபாநாயகர் இது குறித்து விளக்கம் அளித்துள்ளார். அதாவது முதலமைச்சருக்கு எதிராக வற்புறுத்தி எம்.எல்.ஏ ஜக்கையனை ஆளுநரிடம் கடிதம் கொடுக்க வைத்துள்ளதாலும் அதை அவரே பதில் மனுவில் கூறியிருப்பதால் மற்ற 18 பேர் மீது நடவடிக்கை எடுத்ததாகவும் தெரிவித்துள்ளார். 
 

PREV
click me!

Recommended Stories

இந்தியாவின் சோழவம்சத்தின் பெருமை..! வரலாற்றை அசிங்கப்படுத்திய ஒவைசி..!
விஜய்க்கு 'கை' கொடுத்த ராகுல்.. கூட்டணிக்கு அச்சாரமா? பிரவீன் சக்கரவர்த்தி சொன்ன விளக்கம்!