தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் வைத்த செக்! மைசூரிலிருந்து வரவழைக்க புது டெக்னிக்!

First Published Sep 8, 2017, 11:23 AM IST
Highlights
speaker dhanabal notice to dinakaran support mlas


டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள், நேரில் வந்து விளக்கமளிக்க வேண்டும் என்று சட்டப்பேரவை சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். வரும் 14 ஆம் தேதி அன்று விளக்கமளிக்க வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு இரண்டாக பிரிந்த அணிகள் அண்மையில் மீண்டும் இணைந்தன. போர்க் கொடி தூக்கிய ஓபிஎஸ்க்கு துணை முதல்வர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ்-ம் டி.டி.வி.தினகரனை ஒதுக்கத் தொடங்கினர். அதிமுகவில் இருந்து சசிகலா மற்றும் தினகரனை நீக்கப்போவதாக அறிவித்தனர்.

இந்த நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக அதிமுக அம்மா அணியின் துணை பொது செயலாளர் டிடிவி தினகரனின் ஆதரவு எம்எல்ஏக்கள் கடந்த மாதம், ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து தனித்தனியாக கடிதம் கொடுத்தனர்.

தங்கள் ஆதரவு எம்எல்ஏக்களை அவர்கள் பக்கம் இழுக்கும் நடவடிக்கையை தவிர்க்க, புதுவையில் உள்ள சொகுசு விடுதியில் தங்க வைத்தனர். 

இந்த நிலையில், நேற்று டிடிவி தினகரன் ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி, எடப்பாடி பழனிசாமி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்காக ஆளுநரை சந்தித்ததாக கூறினார். நேற்று கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜக்கையன், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு அளிப்பாக கூறினார்.

இந்த நிலையில், சட்டப்பேரவை சபாநாயகர் தனபால், டிடிவி ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் நேரில் வந்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

எம்.எல்.ஏ. ஜக்கையன், டிடிவி தினகரன் அணியில் இருந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு அளிப்பதாக கூறினார். இந்த நிலையில் டிடிவி ஆதரவாளர்கள் 18 ஆக குறைந்த நிலையில் அவர்கள் செப்டம்பர் 14 ஆம் தேதி நேரில் வந்து விளக்கமளிக்க வேண்டும் என்று சபாநாயகர் தனபால் அனுப்பியுள்ள நோட்டீசில் உத்தரவிட்டுள்ளார். 

தமிழக அரசியலில் நிலவும் உச்சகட்ட பரபரப்பு சூழ்நிலையில், டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் நேரில் வந்து விளக்கமளிக்க வேண்டும் என்று சபாநாயகர் தனபாலின் உத்தரவு மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது.
 

click me!