
கோழைத்தனமாக 18 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்துள்ள சபாநாயகரும், முதல்வரும் மோசமான சட்டமன்ற ஜனநாயக படுகொலையை அரங்கேற்றியிருக்கிறார்கள் எனவும், ஊழலும், சட்டமீறல்களும் நிறைந்த "குதிரை பேர" ஆட்சியை தொடர வைக்கும் பா.ஜ.க.வும் - ஆளுநரும் தமிழக அரசியல் நெருக்கடிக்கு பொறுப்பேற்க வேண்டும் எனவும் திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவை செயலாளர் க.பூபதி, இன்று வெளியிட்ட அறிவிப்பின் மூலம், முதலமைச்சரின் மீது புகார் அளித்ததற்காக தேர்தலில் போட்டியிட்டு மக்களின் அதிக வாக்கைப் பெற்று சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட டிடிவி ஆதரவு 18 எம்எல்ஏக்கள், தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
ஆளுநரிடம், முதலமைச்சர் எடப்பாடி மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்று மனு அளித்ததன் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தகுதி நீக்கம் செய்யப்பட்ட டி.டி.வி. தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள், நீதிமன்றத்தில் முறையீட்டுள்ளனர். இது தொடர்பான வழக்கு விசாரணை வரும் 20 ஆம் தேதி நீதிமன்றத்துக்கு வர உள்ளது.
மேலும், இன்று மாலைக்குள் அரசிதழில் வெளியிடப்படும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில், கோழைத்தனமாக 18 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்துள்ள சபாநாயகரும், முதல்வரும் மோசமான சட்டமன்ற ஜனநாயக படுகொலையை அரங்கேற்றியிருக்கிறார்கள் எனவும், ஊழலும், சட்டமீறல்களும் நிறைந்த "குதிரை பேர" ஆட்சியை தொடர வைக்கும் பா.ஜ.க.வும் - ஆளுநரும் தமிழக அரசியல் நெருக்கடிக்கு பொறுப்பேற்க வேண்டும் எனவும் திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தமது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.