பாமகவில் திடீர் திருப்பம்... விலகிய அன்புமணி, ராஜ்யசபா எம்.பியாகும் சௌமியா!!

By sathish kFirst Published Jul 6, 2019, 5:26 PM IST
Highlights

அதிமுக சொன்னதைப்போலவே பாமகவுக்கு ராஜ்யசபா பதவியை கொடுத்துள்ளது. தோற்றாலும் அன்புமணிக்கு எம்பி பதவியை கொடுப்பதாக இருந்தது ஆனால் அவர் விருப்பம் காட்டாததால் அவரது மனைவி சௌமியாவுக்கு கொடுக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நடந்து முடிந்த தேர்தலில் அதிமுகவிடம் ஏழு சீட் வாங்கி மொத்த தொகுதிகளையும் பறிகொடுத்த பாமகத்திற்கு ஒப்பந்தத்தின் படி ராஜ்யசபா சீட் கிடைக்குமா? கிடைக்காதா? என்ற சூழல் நிலவியது. ஏனென்றால் என்னதான் ஒப்பந்தம் போட்டாலும் வாங்கிய 7 தொகுதிகளையும் அனாமத்தா இழந்ததால் கூட்டணியில் குழப்பம் நீடித்தது ஆனால், அமைச்சர் ஜெயக்குமார், பாமகவுக்கு ஒப்பந்தத்தில் சொன்னதைப்போல ஒரு சீட் தர இருப்பதாக உறுதியாக சொன்னார்.

இதனைத் தொடர்ந்து தேர்தல் ரத்ததான வேலூர் நாடாளுமன்றத் தொகுதி மற்றும் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலை மனதில் வைத்து நேற்று முன்பு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், பாமகவுக்கு ஒப்பந்தத்தில் சொன்னதைப்போல ஒரு சீட் தர இருப்பதாக  சொன்னார். இந்த பேட்டியைப் பார்த்த பாமக நிம்மதியாக இருந்தது. நாடாளுமன்றத் தேர்தலில் தர்மபுரியில் தோல்வி அடைந்த அன்புமணி, அதிமுக தயவில் ராஜ்யசபா எம்.பி.யாக ஆகப்போகிறார் என்ற குஷியில் இருக்கும் ராமதாஸ் சட்டசபையில் அமைச்சர் சி.வி. சண்முகம் பேசிய உரையை பாராட்டினார்.

நேற்று முன்தினம் பாராட்டியது இன்று வெளியான அறிவிப்பில் மாநிலங்களவைக்கு அதிமுக சார்பில் 3 மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதால் 2 வேட்பாளர்களை அறிவித்தனர். அதில், சமீபத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற மக்களவை பொதுத் தேர்தலின் போது ஏற்கனவே செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி பாட்டாளி மக்கள் கட்சிக்கு மற்றுமுள்ள ஒரு இடம் ஒதுக்கப் படுகிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம் என அறிவிப்பில் சொல்லப்பட்டிருந்தது.

தோற்றாலும் அன்புமணி ராஜ்யசபா எம்பியாக ஆகப்போகிறார் என்ற குஷியில் இருந்த பாமகவினருக்கு ஒரு ஷாக் கொடுக்கக்கூடிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது  நாடாளுமன்றத் தேர்தலில் தருமபுரி தொகுதியில் போட்டியிட்டு திமுக வேட்பாளர்கள் படுதோல்வி அடைந்தார் அன்புமணி  கட்சியை பலப்படுத்தும் நடவடிக்கையில் தீவிரம் காட்ட உள்ளதால் ராஜ்யசபா எம்பியாக ஆக விருப்பம் காட்டவில்லையாம்.

காடுவெட்டி குரு விவகாரம், வேல்முருகன் எழுச்சி போன்றவை பாமகவின் அதிபயங்கர தோல்வியும், அதலபாதாளத்தில் சரிந்த வாக்கு வங்கியும் அன்புமணியை ரொம்பவே அசைத்துப் பார்த்துவிட்டதாக சொல்கிறார்கள்.

எனவே மீண்டும் கட்சியை பலப்படுத்தி அடுத்த சட்டமன்ற தேர்தலுக்கு தயாராக அன்புமணி வியூகம் வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக வன்னியர்கள் அதிகமுள்ள பகுதியில் இளைஞர்களை நேரில் சந்திக்கும் ஒரு திட்டத்துடன் அன்புமணி தனது பயணத்தை விரைவில் துவங்க உள்ளதாக சொல்கிறார்கள். இதற்கான ஏற்பாடுகளை அன்புமணியின் அரசியல் பிரச்சார குழு தீவிரமாக செய்து வருவதாகவும் கூறுகிறார்கள். இந்த நிலையில் ஏற்கனவே கூறியபடி ராஜ்யசபா எம்.பி. பதவியை பாமகவிற்கு தர தயாராக இருப்பதாக அதிமுகவிலிருந்து ராமதாஸுக்கு தகவல் வந்துள்ளது. இதே தகவலை நேற்று செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமாரும் உறுதிப்படுத்தியுள்ளார். இதனால் அன்புமணி பாமகவின் பிரதிநிதியாக ராஜ்யசபா செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. 

ஆனால் ஏற்கனவே ராஜ்யசபா எம்.பி.யாக வரும் மக்களவை இறுதியாகவும் இருந்து விட்டதால் மீண்டும் எம்.பி.யாக அன்புமணி விரும்பவில்லை என்கிறார்கள். தேர்தலில் வென்ற மத்திய அமைச்சராகும் கனவுடன் அன்புமணி இருந்துள்ளார். ஆனால் அது நிறைவேறாததால் கட்சிப் பணிகளில் ஈடுபட அவர் முடிவெடுத்துள்ளாராம். ராஜ்யசபா எம்.பி. ஆகும் பட்சத்தில் டெல்லிக்கு அடிக்கடி செல்லவிருப்பதால்  பெரிய அளவில் எந்த நன்மைகளும் தனது அரசியல் வாழ்வில் ஏற்படப் போவதில்லை என்று அன்புமணி உணர்ந்துள்ளாராம். 

எனவே ராஜ்யசபா எம்.பி. பதவியை வேறு ஒருவருக்கு கொடுத்து விடலாம் என்று அன்புமணி முடிவெடுத்துள்ளதாக சொல்கிறார்கள். ஆனால் தனது குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரைத் தான் எம்.பி.யாக்க ராமதாஸ் நினைக்கிறாராம். எனவே அன்புமணிக்கு ராஜ்யசபா எம்.பி.யாக விருப்பம் இல்லைஎன்பதால்  அவரது மனைவி சௌமியாவை எம்.பி.யாக்க ராமதாஸ் திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. 

ஏற்கனவே அன்புமணிக்கு ராஜ்யசபா எம்.பி. பதவியை கொடுத்து விட்டு தர்மபுரியில் சௌமியாவை களமிறங்குவது குறித்து ராமதாஸ் ஆலோசனை செய்தார். ஆனால் அன்புமணி தேர்தலில் போட்டியிட வில்லை என்றால் மற்ற வேட்பாளர்கள் மனதளவில் பின்னடைவை சந்திப்பார்கள் என்று கூறி அன்புமணியை தர்மபுரியில் நின்றார். இந்த நிலையில்தான் மாநிலங்களவை எம்பி பதவியில் புதிய திருப்பமாக சௌமியாவிற்கு கொடுக்கவுள்ளதாக தகவல்கள் உலாவருகிறது.

click me!