சோனியா, ராகுலுடன் குஜராத் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சந்திப்பு

First Published Aug 21, 2017, 11:02 PM IST
Highlights
sonia and rahul met gujarath congress mla


குஜராத் மாநிலங்கள் அவை தேர்தல் முடிந்தபின், அந்த மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள், தலைவர் சோனியா காந்தியையும், துணைத் தலைவர் ராகுல்  காந்தியையும் அவர்களின் இல்லத்தில் நேற்று சந்தித்து  பேசினர்

.

ஒற்றுமையாக இருந்து உண்மைக்கும், கொள்கைக்கும் ஆதரவாக தொடர்ந்து போராட வேண்டும் என்று எம்.எல்.ஏ.க்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டதாகத் தெரிகிறது.

குஜராத் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் வருவதையொட்டி, அதற்கு முன்பாக எம்.எல்.ஏ.க்கள் அழைத்துப் பேசியுள்ளது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

குஜராத் மாநிலத்தில்  3 இடங்களுக்கான மாநிலங்கள் அவைத் தேர்தல் சமீபத்தில் நடந்தது. இதில் பா.ஜனதா கட்சித் தலைவர் அமித் ஷா, ஸ்மிருதி இராணி ஆகியோர் வெற்றி உறுதியானது. ஆனால், சோனியா காந்தியின் தனிப்பட்ட செயலாளர் அகமதுபடேலுக்கு எதிராக காங்கிரஸ் கட்சிக்களுள் எதிர்ப்பு கிளம்பி, 7 எம்.எல்.ஏ.க்கள்காங்கிரஸ் கட்சியில் இருந்து வௌியேறி பா.ஜனதாவின் குதிரை பேரத்துக்கு இலக்கானார்கள் என குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால்,  மாநிலங்கள் அவைத் தேர்தலில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஒற்றுமை இருந்து வாக்களித்ததால்,  அகமதுபடேல் வெற்றி பெற்றார்.

இந்த தேர்தல் வெற்றிக்கு பின், குஜராத் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கட்சித் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரை அவர்களின் இல்லத்தில் நேற்று சந்தித்து பேசினார்கள். அப்போது காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர்(குஜராத் பொறுப்பு) அசோக் கெலாட், எம்.பி. அகமது படேல்ஆகியோரும் உடன் இருந்தனர்.

இந்த கூட்டம் முடிந்தபின் ராகுல் காந்தி டுவிட்டரில் விடுத்த பதிவில், “ குஜராத் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் தலைவர்களுடன் நல்ல ஒரு சந்திப்பு இன்று நடந்தது’’ என்று தெரிவித்தார்.   எம்.எல்.ஏ.க்கள் ஒற்றுமையாக இருந்து தேர்தலில் வாக்களித்ததற்கு சோனியாகாந்தியும், ராகுல் காந்தியும் வாழ்த்துத் தெரிவித்தனர்.

இது குறித்து குஜராத் காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளரும், எம்.எல்.ஏ.வுமான சக்திசிங் கோலி கூறுகையில், “ எம்.எல்.ஏ.க்களுக்கு வாழ்த்துத் தெரிவித்த சோனியா காந்தி, ராகுல் காந்தி, ஒற்றுமையாக சோதனைக் காலத்தில் இருக்க வேண்டும் எனத் தெரிவித்தனர். உண்மைக்கும், கொள்கைக்கும் ஆதரவாக தொடர்ந்து இருக்க வேண்டும். காங்கிரஸ் கட்சி அதிகாரத்தை எடுக்க போட்டியிடாவிட்டாலும் கூட, குஜராத்தில் மகாத்மா காந்தியின் கொள்கைகளுக்கும்,சிந்தாந்தாங்களையும் அழியாமல் காக்க வேண்டும். மதவாத சக்திகளுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து  போராடி, மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என அவர்கள் தெரிவித்தனர்’’ என்றார்.

 

click me!