5 மாத கால கண்ணாமூச்சி நாடகம் முடிவுக்கு வந்தது...’உயிருடன்’திரும்பினார் முகிலன்...

By Muthurama LingamFirst Published Jul 7, 2019, 1:07 PM IST
Highlights

5 மாதகால நீண்ட நெடிய நாடகம் ஒருவழியாக முடிவுக்கு வந்துள்ளது.போராளி முகிலன் கண்டுபிடிக்கப்பட்டார்.சமூக செயற்பாட்டாளரான போராளி முகிலன் காணாமல் போன வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. ஆந்திரா காவல்துறையினர் பிடியில் முகிலன் சிக்கியிருப்பதாக வெளியான காணொலியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தன்னை ஏற்கனவே கைது செய்து வைத்துக்கொண்டு சித்திரவதை செய்ததாக முகிலன் கூறியுள்ளார். 


5 மாதகால நீண்ட நெடிய நாடகம் ஒருவழியாக முடிவுக்கு வந்துள்ளது.போராளி முகிலன் கண்டுபிடிக்கப்பட்டார்.சமூக செயற்பாட்டாளரான போராளி முகிலன் காணாமல் போன வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. ஆந்திரா காவல்துறையினர் பிடியில் முகிலன் சிக்கியிருப்பதாக வெளியான காணொலியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தன்னை ஏற்கனவே கைது செய்து வைத்துக்கொண்டு சித்திரவதை செய்ததாக முகிலன் கூறியுள்ளார். 

கூடங்குளத்தை அணு உலை  உட்பட மக்கள் விரோத திட்டங்களுக்கு எதிராக குரல் கொடுத்து சிறைவாசம் அனுபவித்தவர் முகிலன். ஜல்லிக்கட்டுப் புரட்சியின் போது போலீசாரின் கொடூர அடக்குமுறைக்கு உள்ளானவர்.  தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்திலும் தீவிரமாக பங்கேற்றவர். தூத்துக்குடியில் 13 தமிழர் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து நடந்த போராட்டங்களில் பங்கேற்றவர்.அத்துடன் தூத்துக்குடியில் 13 பேர் சுட்டு படுகொலை செய்யப்பட்டது திட்டமிட்ட ஒரு சம்பவம் என்பதை ஆதாரத்துடன் சென்னையில் செய்தியாளர்களிடம் வெளிப்படுத்தினார் முகிலன். 

அந்த செய்தியாளர் சந்திப்புக்குப் பின்னர் முகிலன் திடீரென காணாமல் போனார். அவர் காணாமல் போய் 150 நாட்கள் நெருங்கி வரும் நிலையில் அவரை கண்டுபிடித்து ஒப்படைக்க கோரும் மனுமீது உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு வழக்கு விசாரணை நடந்து வந்தது.அவரது நிலைமை என்ன என்பது யாருக்கும் தெரியவில்லை. முகிலன் உயிருடன் இருக்கிறாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து பல கேள்விகள் எழுந்தன.

 இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டு விசாரணையும் நடைபெற்று வருகிறது.வழக்கு விசாரணையின் போது முகிலன் உயிருடன் இருப்பதாக காவல்துறை தெரிவித்து இருந்தனர். திருப்பதி ரயில் நிலையத்தில் முகிலன் கோஷமிட்டபடி காவல்துறையினர் இழுத்து செல்லும் காணொலி வெளியாகியுள்ளது. இதனைத் தொடா்ந்து முகிலன் வேலூர் மாவட்டம் காட்பாடிக்கு அழைத்து வரப்பட்டார்.

 முகிலன் காட்பாடிக்கு வந்த செய்தி அறிந்து அவரது ஆதரவாளா்கள் பலரும் அங்கு வரத் தொடங்கினா். அதன் பின்னா் முகிலன் வேறு பகுதிக்கு மாற்றம் செய்யப்பட்டார். அப்போது என்னை கடத்தீட்டு போறாங்க என முகிலன் கோஷம் எழுப்பியதாலும், முகிலனை காவல் துறையினா் இழுத்துச் சென்றதாலும் காட்பாடி ரயில் நிலையத்தில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

காட்பாடி ரயில் நிலையத்தில் முகிலனிடம் சுமார் 1 மணி நேரம் விசாரணை நடைபெற்ற பின்னா், இரவு 11.50 மணியளவில் முகிலன் சிபிசிஐடி அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்.வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் 12.40 மணிக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. பின்னா் 1.30 மணியளவில் வேலூரில் இருந்து முகிலனை அழைத்துக்கொண்டு புறப்பட்ட சிபிசிஐடி அதிகாரிகள் இன்று காலை 4 மணியளவில் சென்னை வந்தடைந்தனா். காட்பாடியில் செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்தபோது தான் கடத்தி செல்லப்பட்டதாக சமூக செயற்பாட்டாளர் முகிலன் பரபரப்பு குற்றசாட்டு கூறியுள்ளார். இரண்டு மாதகாலம் தன்னை சித்தரவதை செய்து மனநலம் பாதிக்க வைத்ததாகவும் முகிலன் குற்றம் சாட்டியுள்ளார்.

click me!