விதியை மீறி வாக்களித்த சிவகார்த்திகேயன்... தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை..!

By Thiraviaraj RMFirst Published Apr 24, 2019, 1:18 PM IST
Highlights

விதியை மீறி வாக்களித்து இருந்தாலும் நடிகர் சிவகார்த்திகேயனின் வாக்கு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என  தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார். 

விதியை மீறி வாக்களித்து இருந்தாலும் நடிகர் சிவகார்த்திகேயனின் வாக்கு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என  தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார். 

வளசரவாக்கத்தில் உள்ள குட் ஷெப்பர்ட் பள்ளியில் வாக்களிக்க மனைவியுடன் வந்தார். ஆனால் அந்த வாக்குச்சாவடியில் உள்ள 303 எண்ணில் அவரது மனைவிக்கு மட்டும் தான் ஓட்டு இருந்தது. சிவகார்த்திகேயனுக்கு வாக்கு இல்லை. அவர் மீண்டும் மதியம் இரண்டு மணிக்கு மேல் வாக்குச்சாவடிக்கு வந்தார். அவருக்கு சிறப்புச் சலுகை கொடுத்து கைரேகை பதிவு செய்து வாக்களிக்க அனுமதிக்கப்பட்டது. வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர் எப்படி வாக்களித்தார் என்ற சர்ச்சை எழுந்தது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு, ’விதியை மீறி சிவகார்த்திகேயன் வாக்களித்திருந்தாலும்  அவரது வாக்கு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். சிவகார்த்திகேயன் யாருக்கு வாக்களித்தார் என்பது தெரியாத சூழலில் அவரது வாக்கை எண்ணாமல் விட முடியாது.  வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாமல் வாக்காளித்து இருந்தாலும் அவரது வாக்கு கணக்கில் கொள்ளப்படும். சிவகார்த்திகேயன் விவகாரத்தில் சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. 

நடிகர் ஸ்ரீகாந்த் ஓட்டுப்போட வில்லை விரலில் மட்டுமே மை வைத்துள்ளார். இதுகுறித்து சம்ப்பந்தப்பட்ட அதிகாரியிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது’ என அவர் தெரிவித்தார். 

click me!