கூட்டணியில் இழுபறி! ஸ்டாலினை சந்திக்க சென்னை வருகிறார் சீதாராம் யெச்சூரி!

By sathish kFirst Published Nov 8, 2018, 9:40 AM IST
Highlights

நாடாளுமன்ற தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தையில் தி.மு.க – இடதுசாரிக்கட்சிகள் இடையேயும் இழுபறி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

நாடாளுமன்ற தேர்தலில் 25 தொகுதிகளுக்கு மேல் வேட்பாளர்களை நிறுத்துவது என்கிற மனக் கணக்குடன் பணிகளை தி.மு.க முடுக்கிவிட்டுள்ளது. கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் தொடங்கி இடதுசாரிகள் வரை அனைத்து கட்சிகளுக்கும் எத்தனை தொகுதி என்பதை இறுதி செய்து சொல்ல வேண்டியவர்களிடம் தி.மு.க தலைமை சொல்லிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

தி.மு.க தலைவர் ஸ்டாலின் தரப்பின் இந்த நடவடிக்கை ஜெயலலிதா ஸ்டைல் கூட்டணி பேச்சுவார்த்தை போல் உள்ளதாக காங்கிரஸ் மட்டும் இன்றி இடதுசாரிகள், திருமாவளவன் ஏன் வைகோகூட நினைப்பதாக கருதுகிறார்கள். ஆனால் தற்போதையசூழலில் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்றால் தி.மு.கவுடன் கூட்டணி அமைப்பதை தவிர தங்களுக்கு வேறு வழியில்லை என்பதிலும் இந்த கட்சிகள் தெளிவாக உள்ளன.

எனவே தான் தி.மு.கவுடன் தொடர்ந்து பேசினால் தற்போதைய நிலை மாறி கூடுதல் தொகுதிகள் கிடைக்கும் என்று கூட்டணி கட்சிகள் கருதுகின்றன. அந்த வகையில் தான் தீபாவளியன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணனும், எம்.பி., டி.கே.ரங்கராஜனும் சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலினை சந்தித்து பேசியுள்ளனர்.

அப்போது ஒரு தொகுதி என்பது சரியாக இருக்காது என்றும்மேலும் ஒரு தொகுதி வேண்டும் என்றும் பேச்சை இடதுசாரித்தலைவர்கள் எடுத்ததாகவும் ஆனால் ஸ்டாலின் பிடிகொடுக்கவில்லை என்றும் தெரிகிறது.இதனால் மார்க்சிஸ்ட் தேசிய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரியை அழைத்து வந்து பேச்சுவார்த்தை நடத்த அந்த கட்சியின் தமிழக நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர்.

வழக்கமாக தமிழக தலைவர்களிடம் ஒரு எண்ணிக்கையும் தேசியத் தலைவர்கள் வந்தால் வேறு ஒரு எண்ணிக்கையிலும் சீட் ஒதுக்குவது கலைஞர் ஸ்டைல். எனவே அதே முறையில் முயன்றால் ஸ்டாலினிடம் கூடுதலாக ஒரு சீட் பெற்றுவிடலாம் என்பது தான் தமிழக இடதுசாரித்தலைவர்களின் எண்ணமாக உள்ளது. 

click me!