
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கும் நடிகர் விஜய்க்கும் இடையே ஒரு ஒற்றுமை இருக்கிறது.
என்னவென்று கேட்கிறீர்களா? இதைப் படிங்க...
விஜய் நடிப்பில் வெளியான மெர்சல் திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த ஜிஎஸ்டி வரிவிதிப்பு தொடர்பான வசனங்களை நீக்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர்கள் வலியுறுத்தினர்.
மெர்சல் திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த வசனங்களால் ஆத்திரமடைந்த பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, விஜய் வருமான வரி ஏய்ப்பு செய்தார் என குற்றம்சாட்டி இருந்தார். ஆனால் விஜய் வரி ஏய்ப்பு செய்ததில்லை என அவரது தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், விஜய் வரிஏய்ப்பு செய்தது உண்மைதான் என வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2015-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் விஜய், சமந்தா, நயன்தாரா உள்ளிட்ட திரைத்துறையினர் 10 பேர் வீடுகளில் வருமான வரி சோதனை நடந்தது.
அப்போது, புலி படத்தில் நடித்ததற்காக பெற்ற சம்பளத்தில் 5 கோடி ரூபாயை விஜய் கணக்கில் காட்டாதது கண்டுபிடிக்கப்பட்டதாகவும் ஆனால் அதன்பிறகு அந்த வரியை விஜய் செலுத்திவிட்டதாகவும் வருமான வரித்துறையினர் தெரிவித்தனர். அதேபோல், வரி ஏய்ப்பு செய்த மற்றவர்களிடமும் வரி வசூலிக்கப்பட்டது.
வரி ஏய்ப்பு செய்தோர், அந்த வரியை செலுத்தியபின், வரி ஏய்ப்பு செய்த தொகை மற்றும் அதற்கான வட்டியும் சேர்த்து கூட்டுவரி செலுத்த வேண்டும்.
விஜய் வரி ஏய்ப்பு செய்திருந்ததால் அவர்மீது ஏன் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கக்கூடாது என வருமான வரித்துறையினர் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். இதையடுத்து கூடுதல் வரி செலுத்துவதற்கான ஆவணத்தைப் பெற்று கூடுதல் வரியையும் விஜய் செலுத்தியுள்ளார். அதனால் அவர் மீது சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.
ஆனால் வரிஏய்ப்பு செய்து ஒருமுறை கூட்டு வட்டி கட்டியவர், மீண்டும் வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டால் சிறையில் அடைக்கப்படுவார்.
அதன் அடிப்படையில், இனிமேல் விஜய் வரி ஏய்ப்பில் ஈடுபட்டால் சிறை தண்டனை பெற வாய்ப்புள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும் வரி ஏய்ப்பு செய்து கூட்டுவரி கட்டியுள்ளார் என வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இப்போது தெரிகிறதா? ஜெயலலிதாவிற்கும் விஜய்க்குமான ஒற்றுமை என்னவென்று?