மின்னணு வாக்குப்பதிவு முறைக்கு முற்றுப்புள்ளி.. மீண்டும் வருகிறது வாக்குச்சீட்டு முறை?

First Published Mar 18, 2018, 12:57 PM IST
Highlights
shift from evm to paper ballot soon


மின்னணு வாக்குப்பதிவு முறையிலிருந்து வாக்குச்சீட்டு முறைக்கு மாற வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பாக எதிர்க்கட்சிகளுடன் விவாதித்து அந்த முடிவை பரிசீலிக்க தயார் என பாஜக பொதுச்செயலாளர் ராம் மாதவ் தெரிவித்துள்ளார்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடுகள் நடைபெறுவதாக தேசிய அளவில் தொடர்ச்சியாக புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. அண்மையில் உத்தர பிரதேசத்தில் இரண்டு மக்களவைத் தொகுதி இடைத்தேர்தல் முடிவு குறித்து கருத்து தெரிவித்த சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், மின்னணு வாக்குப்பதிவு இயந்திர முறைகேடு இல்லாவிட்டால், இன்னும் கூடுதல் வாக்கு வித்தியாசத்தில் சமாஜ்வாதி வேட்பாளர்கள் வெற்றி பெற்றிருப்பார்கள் என கருத்து தெரிவித்திருந்தார்.

அதேபோல, தேசிய அளவில் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள், மீண்டும் வாக்குச்சீட்டு முறைக்கு மாற வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் 84வது தேசிய மாநாட்டில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திர முறையிலிருந்து மீண்டும் வாக்குச்சீட்டு முறைக்கு மாற வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பாஜக பொதுச்செயலாளர் ராம் மாதவ், அனைத்து கட்சியினரின் ஒருமித்த கருத்துடன் தான் வாக்கு சீட்டு முறையிலிருந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திர முறைக்கு மாறினோம் என்பதை நினைவு கூர விரும்புகிறேன். ஆனால் தற்போதைய சூழலில் பெரும்பாலான கட்சிகள் மீண்டும் வாக்குச்சீட்டு முறைக்கு மாற வேண்டும் என வலியுறுத்துகின்றன. இதுதொடர்பாக அனைத்து கட்சிகளுடனும் ஆலோசித்து பரிசீலிக்க மத்திய அரசு தயாராக இருப்பதாக பதிலளித்துள்ளார்.

<blockquote class="twitter-tweet" data-lang="en"><p lang="en" dir="ltr">I would like to remind Congress that the decision to shift from paper ballots to EVMs was taken because of a larger consensus. Now today, if every party think that we should return to paper ballots again, after due discussion, we can consider: Ram Madhav, BJP General Secretary <a href="https://t.co/nqzf2zVOWQ">pic.twitter.com/nqzf2zVOWQ</a></p>&mdash; ANI (@ANI) <a href="https://twitter.com/ANI/status/975079190860042249?ref_src=twsrc%5Etfw">March 17, 2018</a></blockquote>
<script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>
 

click me!