சிறையில் சலுகைகள் பெற சசிகலாவிடம் லஞ்சம் வாங்கியவர் மீதான நடவடிக்கை என்ன? ஆர்.டி.ஐ.யில் டிஐஜி ரூபா கேள்வி!

First Published Dec 17, 2017, 12:54 PM IST
Highlights
Shashikala prison privileged affair - questioned in the RTI DIG Roopa


பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவுக்கு சலுகைகள் ஏற்படுத்தி தரப்பட்டதாக ஊழல் தடுப்பு பிரிவிடம் கொடுத்த புகாரின் நிலை குறித்து டிஐஜி ரூபா, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் கேள்வி எழுப்பி உள்ளார். இதனால், இந்த விவகாரத்தில் மீண்டும் பரபரப்பு தொற்றியுள்ளது.

நான்கு வருட சிறைத் தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு, சிறையில் சிறைத் துறை விதிகளை மீறி, பல்வேறு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. 

அப்போது, சிறைத் துறை டிஐஜியாக இருந்த ரூபா, இது குறித்து ஆய்வு செய்தார். அப்போது, அவர் குற்றச்சாட்டுகள் சிலவற்றை உண்மை என்று கண்டுபிடித்தார். பின்னர் இவற்றை முறையாகப் பதிவு செய்து, உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். அதன் பின்னர் டிஐஜி ரூபா, வேறு துறைக்கு
மாற்றப்பட்டார். 

கர்நாடக சிறைத்துறை அதிகாரி டிஜிபி சத்யநாராயணா, ரூபா மீது மானநஷ்ட வழக்கு போடப்போவதாக தெரிவித்திருந்தார். அதற்கு டிஐஜி ரூபா, டிஜிபி சத்யநராயணராவின் மானநஷ்ட வழக்கை சந்திக்க தயார் என்றும் சசிகலாவிடம் இருந்து சத்யநாராயணன் ரூ.2 கோடி வாங்கியது உண்மைதான் என்றும்
கூறியிருந்தார். மேலும், ஊழல் தடுப்பு பிரிவு போலீஸ்தான், லஞ்சப் புகார் குறித்து விசாரிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி இருந்தார்.

சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் ஏற்படுத்தி தரப்பட்டதாக ஊழல் தடுப்பு பிரிவிடம் கொடுத்த புகாரின் நிலை குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் டிஐஜி ரூபாய் கேள்வி எழுப்பி உள்ளார். புகாரின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும்,
விசாரணையின் நிலை குறித்து அவர் கேள்வி எழுப்பி உள்ளார். 

இந்த விவகாரம் தொடர்பாக டிஐஜி ரூபா, தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் டிஐஜி கேள்வி எழுப்பியுள்ள நிலையில் இந்த விவகாரத்தில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

click me!