தமிழகத்தின் தலைமைச்செயலாளர் சண்முகம் கூடுதலாக 3மாதங்கள் பதவியில் நீட்டிப்பார்.. தமிழக அரசு அறிவிப்பு.!!

Published : Jun 03, 2020, 10:21 PM IST
தமிழகத்தின் தலைமைச்செயலாளர் சண்முகம் கூடுதலாக 3மாதங்கள் பதவியில் நீட்டிப்பார்.. தமிழக அரசு அறிவிப்பு.!!

சுருக்கம்

தமிழக அரசின் தலைமைச் செயலாளராக கே.சண்முகம் பதவிக்காலம் ஜீலை மாதத்துடன் முடிவடைய இருக்கிறது.கொரோனா காலத்தில் அவருக்கு சில முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அவரை பணியில் இருந்து விடுவிப்பது என்பது சாத்தியமில்லாத ஒன்றாக உள்ளது. 

தமிழக அரசின் தலைமைச் செயலாளராக கே.சண்முகம் பதவிக்காலம் ஜீலை மாதத்துடன் முடிவடைய இருக்கிறது.கொரோனா காலத்தில் அவருக்கு சில முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அவரை பணியில் இருந்து விடுவிப்பது என்பது சாத்தியமில்லாத ஒன்றாக உள்ளது. எனவே  ஆகஸ்ட் முதல் அக்டோபர் மாதம் வரை 3 மாதங்களுக்கு அவரது பதவிக்காலம் நீட்டிப்பு செய்ய மத்திய அரசுக்கு மாநில அரசு கடிதம் எழுதியிருந்தது. இதை பரிசீலனை செய்த மத்திய அரசு, தமிழக அரசின் பரிந்துரையை ஏற்று சண்முகத்தின் பதவிக்காலத்தை 3மாதங்கள்  நீட்டித்துள்ளது. எனவே அக்டோபர் மாதம் வரையிலும் சண்முகம் தலைமைச் செயலாளராக பதவி வகிப்பார்.
கடந்த 2019-ஆம் ஆண்டு தமிழக தலைமைச் செயலாளராக இருந்த கிரிஜா வைத்தியநாதன் ஓய்வு பெற்றதை அடுத்து, புதிய தலைமைச் செயலாளராக கே.சண்முகம் நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 

PREV
click me!

Recommended Stories

விஜய்யும், சீமானும் பாஜக பெற்றெடுத்த பிள்ளைகள்.. மதுரையில் திருமா பரபரப்பு பேச்சு
ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!