பாஜகவில் இணைந்த ஷாஹீன் பாக் போராட்டக்காரர்கள்..!உற்சாகத்தில் பாஜக..! உஷ்ணத்தில் முஸ்லீம் அமைப்புகள்.!!

Published : Aug 16, 2020, 08:39 PM IST
பாஜகவில் இணைந்த ஷாஹீன் பாக் போராட்டக்காரர்கள்..!உற்சாகத்தில் பாஜக..! உஷ்ணத்தில் முஸ்லீம் அமைப்புகள்.!!

சுருக்கம்

குடியுரிமைத் திருத்த சட்டத்திற்கு எதிராக போராடிய ஷாஹீன் பாக் சமூக ஆர்வலர் ஷாஜாத் அலி மற்றும் பலர், இன்று மாநில பாஜக தலைவர் ஆதேஷ் குப்தா முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர்.இந்த சம்பவம் முஸ்லீம் மக்களிடையே  சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.  

இந்த திடீர் இணைப்பு குறித்து ஊடகங்களிடம் பேசிய ஷாஜாத் அலி..."பாஜக எங்கள் எதிரி என்று தவறாக நினைக்கும் எங்கள் சமூகத்தில் உள்ளவர்களிடம் அப்படியில்லை என நிரூபிக்கவே நான் பாஜகவில் சேர்ந்துள்ளேன். அதே குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக நாங்கள் அவர்களுடன் ஒன்றாக அமர்ந்திருப்போம்".இதற்கிடையில், டெல்லி பாஜக தலைவர் ஆதேஷ் குப்தா, அனைத்து முஸ்லீம் சகோதரர்களையும் வளர்ச்சியின் பிரதான நீரோட்டத்தில் கொண்டுவரவே பாஜக  விரும்புகிறது.

இன்று நூற்றுக்கணக்கான முஸ்லீம் சகோதரர்கள், பாஜகவுக்கு முஸ்லீம்களுடன் எந்தவித பாகுபாடும் இல்லை என்பதை உணர்ந்து கட்சியில் சேர்ந்துள்ளனர். அவர்களை வளர்ச்சியின் முக்கிய நீரோட்டத்திற்கு கொண்டு வர விரும்புகிறோம். முத்தலாக் விஷயத்தில் பிரதமரின் நடவடிக்கைகளை கவனித்த பின்னர் கட்சியில் சேர்ந்த அனைத்து பெண்களையும் வாழ்த்த விரும்புகிறேன்.” என்று குப்தா கூறயது முஸ்லிம் மக்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

 பாஜக தலைவர் ஷியாம் ஜாஜு பேசுகையில்,“சி.ஏ.ஏ பற்றி பேசப்பட்டபோது, சில அரசியல் கட்சிகள் முஸ்லீம் சமூகத்தை தவறாக வழிநடத்த முயன்றன. ஆனால் இப்போது நாட்டின் ஒவ்வொரு முஸ்லீமும் எதையும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை என்பதை அறிந்து கொண்டனர். யாரும் தங்கள் வாக்களிக்கும் உரிமையையும் தேசியத்தையும் பறிக்க மாட்டார்கள். பிறகு இந்த கட்சி மூலமாக மட்டுமே தங்களுக்கு நீதி கிடைக்கும் என்பதை உணர்ந்து, ஷாஹீன் பாக் நகரில் நடந்த போராட்டத்தில் கலந்து கொண்ட ஏராளமான முஸ்லீம்கள் இன்று கட்சியில் சேர்ந்துள்ளனர். 

PREV
click me!

Recommended Stories

பாஜகவையே பைபாஸ் செய்யும் எடப்பாடி... கையை பிசையும் அமித் ஷா அண்ட் கோ..!
மதம் உண்மையில் பிரபஞ்சத்தின் அறிவியல்..! மோகன் பகவத் அசத்தல் விளக்கம்..!