ஐடி ரெய்டில் சிக்கிய  சீக்ரெட் சிடி…. பிரபலங்களின் குரல் பதிவாகியுள்ளதா ? செய்யாத்துரை குரூப்பை கிரில் பண்ணும் வருமான வரித்துறை….

Asianet News Tamil  
Published : Jul 20, 2018, 09:02 AM ISTUpdated : Sep 19, 2018, 02:44 AM IST
ஐடி ரெய்டில் சிக்கிய  சீக்ரெட் சிடி…. பிரபலங்களின் குரல் பதிவாகியுள்ளதா ? செய்யாத்துரை குரூப்பை கிரில் பண்ணும் வருமான வரித்துறை….

சுருக்கம்

seyyadurai it raid cd siezed by Income tax dept

நெடுஞ்காலை ஒப்பந்ததாரர் செய்யாத்துரை வீட்டில் வருமான வரித்துறை நடத்திய அதிரடி சோதனையில் 180 கோடி ரூபாய் மற்றும் 105 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் பல ரகசிய  சிடி க்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அதில் சில விஐபிக்கள் பேசியது பதிவாகியுள்ளதாகவுத் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரரும், அரசியல் அதிகார வட்டத்திற்கு மிகுந்த நெருக்கமானவர் என கூறப்படும், அருப்புக்கோட்டையைச் சேர்ந்த செய்யாதுரையின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் கடந்த 4 நாட்களாக அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த சோதனையின்போது தமிகம் முழுவதும் பல இடங்களில் இருந்து 180 கோடி ரூபாய் ரொக்கப் பணமும், 105 கிலோ தங்கக் கட்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் நேற்று நடத்தப்பட்ட  சோதனையில் சில விஐவிக்களின்  உரையாடல்கள் பதிவு செய்யப்பட்டுள்ள 'சிடி' சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் சிடி கைப்பற்றப்பட்டுள்ளகு குறித்து  வருமான வரித்துறை  அதிகாரிகள் இதுவரை மூச்சுவிடவில்லை.

அதே நேரத்தில் செய்யாத்துரையிடம்  பேசிய சில விஐபிக்கள் இதனால் கலக்கத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் இந்த சிடியில்  42 பேரின் உடையாடல்கள் பதிவாகி உள்ளதாக கூறப்படுகிறது. கூவத்தூரில் அதிமுக எம்எல்ஏக்கள் தங்கிருந்தபோது  ஒப்பந்ததாரர் செய்யாத்துரையிடம்  சில முக்கியமான ஆட்கள் பணம் எடுத்துவரச்சொன்னது போன்ற பல விஷயங்கள் இதில் அடங்கியிருப்பதாக கூறப்படுகிறது.

இதே போன்று அதிகார வட்டத்தில் இருக்கும் பலர் செய்யாத்துரையிடம் பேசிய குரல்களுன் பதிவாகியுள்ளதாக வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அரசியல் வட்டாரத்தில் இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

PREV
click me!

Recommended Stories

ராமதாஸ் IN திருமா OUT..? திக்கு தெரியாமல் தவிக்கும் திமுக..? விசிக கோபத்துக்கு காரணம் என்ன..?
அனல் பறக்கும் தேர்தல் களம்..! பிப்.1 முதல் 234 தொகுதிகளிலும் பிரசாரத்தை தொடங்கும் திமுக..