திமுக- அதிமுகவினரிடையே கலவரம்... செந்தில் பாலாஜி - ஜோதிமணியால் பெரும் பதற்றம்..!

By Thiraviaraj RMFirst Published Apr 16, 2019, 4:32 PM IST
Highlights

தேர்தல் பிரச்சாரம் இன்னும் சற்று நேரத்தில் முடிவடைய உள்ள நிலையில் காரூரில் அதிமுக- திமுகவினரிடையே கடும் மோதல்
ஏற்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

தேர்தல் பிரச்சாரம் இன்னும் சற்று நேரத்தில் முடிவடைய உள்ள நிலையில் காரூரில் அதிமுக- திமுகவினரிடையே கடும் மோதல்
ஏற்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

கரூர் வெங்கமேடு பகுதியில் நடைபெற்ற இந்த மோதலில் திமுக அதிமுகவினரிடைடேயே கைகலப்பு ஏற்பட்டதால் பரபரப்பு
ஏற்பட்டுள்ளது. அப்போது திமுக ஆதரவாளரான நாஞ்சில் சம்பத்தும் தக்கப்பட்டார். கரூர் பேருந்து நிலையம் பகுதியில் இறுதி நேரத்தில் பரப்புரை மேற்கொள்ள அதிமுக ஏற்கெனவே அனுமதி பெற்றுள்ளது. இந்நிலையில் அதே இடத்தில் அதே நேரத்தில் பிரச்சாரம் செய்ய காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஜோதிமணி கோரிக்கை விடுத்திருந்தார். ஏற்கெனவே மாலை 4 மணி முதல் 6 மணி வரை அதிமுகவுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ள நிலையில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஜோதிமணிக்கு அனுமதி வழங்க மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அலுவலருமான அன்பழகன் மறுத்து விட்டார்.

இறுதி கட்ட பிரசாரத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் கரூர் தேர்தல் அலுவலகத்தில் ஜோதிமணி- செந்தில்பாலாஜி ஆகியோர்
உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 6 மணி நேரமாக இந்தப்போராட்டம் நடந்தது. பிறகு அனுமதி வாங்கிட்டு இருவரும் சென்று விட்டனர். 

இதனையடுத்து ஜோதிமணி தனக்கு ஆதரவாக செயல்பட வேண்டும் என தன்னை மிரட்டுவதாகவும், 100க்கும் மேற்பட்ட ஜோதிமணி ஆதரவாளர்கள் நள்ளிரவில் வீடு புகுந்து மிரட்டுகிறார்கள். எனக்கு மட்டுல்ல. தேர்தல் அலுவலர்கள் அனைவரது உயிருக்கும் பாதுகாப்பு இல்லை. எனவே ஜோதிமணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறையிலும், தேர்தல் ஆணையத்திடமும் மாவட்ட ஆட்சியர் அன்பழகன் புகார் தெரிவித்திருந்தார்.

வேட்புமனு தாக்கல் செய்யும் போது தேர்தல் அலுவலகத்திற்குள் செந்தில்பாலாஜி எஸ்.பி மீது கையை வைத்து இடித்து தள்ளினார்.
அங்கு ஜோதிமணியும் அடாவடியாக நடந்து கொண்டார். அடுத்து ஒரு கிராமத்தில் செந்தில் பாலாஜியும் ஜோதிமணியும் பிரச்சாரத்திற்கு
சென்றபோது, எதிர்த்து கேள்வி கேட்ட ஒருவர் கடுமையாக தாக்கப்பட்டார். இந்நிலையில் அதிமுக அனுமதி வாங்கிய அதே நேரத்தில் அதே இடத்தில் பிடிவாதமாக அனுமதி வாங்கி திமுக - அதிமுக கூட்டணி கட்சியினரிடையே கலவரத்தை ஏற்படுத்தி மோதல் உருவாக ஜோதிமணி முற்படுவதாக கரூர் பகுதி மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இதனால், வெங்கமேடு பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.  

click me!