எங்கள் எதிரியின் நண்பனும் எங்களுக்கு எதிரிதான்..! அலறவிடும் அமைச்சர் செல்லூர் ராஜூ..!

Asianet News Tamil  
Published : Nov 12, 2017, 01:56 PM ISTUpdated : Sep 19, 2018, 01:25 AM IST
எங்கள் எதிரியின் நண்பனும் எங்களுக்கு எதிரிதான்..! அலறவிடும் அமைச்சர் செல்லூர் ராஜூ..!

சுருக்கம்

sellur raju slams dmk

திமுகவுடன் கூட்டணி சேரும் எந்த கட்சியும் அதிமுகவுக்கு எதிரிதான் என அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.

மதுரையில் வைகை ஆற்று நீர் ஆவியாவதை தெர்மாகோலை வைத்து தடுக்க முயன்றதிலிருந்து தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, உலகளவில் பிரபலமானார். 

அதன்பின்னர் தொடர்ச்சியாக பல்வேறு கருத்துகளைக் கூறி சர்ச்சைக்கும் நகைச்சுவைக்கும் உள்ளானார்.

நேற்று கூட, எதிர்க்கட்சிகளைக் கண்டு டெங்குவும் வெள்ளமும் பயந்து ஓடிவிட்டது என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இன்று மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ, ஜெயலலிதாவின் ஆட்சியில் தவறு செய்யும் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், திமுக ஆட்சி இருந்தால் வன்முறைதான் அதிகரிக்கும். எங்களது எதிரியான திமுகவுடன் கூட்டணி சேரும் எந்த கட்சியும் எங்களுக்கு எதிரிதான் என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
 

PREV
click me!

Recommended Stories

Women Free Bus Travel: பெண்களுக்கு இலவச பயணம்.! எந்த பேருந்துகளில் கட்டணம் கிடையாது?
Free 3 LPG Cylinders Per Year: விலையில்லாமல் ஆண்டுக்கு 3 சிலிண்டர்.! யாருக்கு கிடைக்கும் தெரியுமா?