வரலாற்று துயரத்தில் சீமான்... கொடைக்கானலில் 6 ஏக்கர் நிலம்..??? தம்பிகளை கதிகலங்க வைக்கும் வைரல்...!!

Published : Nov 25, 2021, 01:21 PM IST
வரலாற்று துயரத்தில் சீமான்... கொடைக்கானலில் 6 ஏக்கர் நிலம்..??? தம்பிகளை கதிகலங்க வைக்கும் வைரல்...!!

சுருக்கம்

2015 ஆம் ஆண்டு அந்த சொத்து வழங்கப்பட்டுள்ளதாகவும் ஆவணங்களின் தெரிவித்துள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது. ஆனால் முறைப்படி பார்த்தால் அந்த 6 ஏக்கர் நிலத்தையும் குறைந்தது ஆறு கோடி ரூபாய்க்கு வாங்கி இருக்க வேண்டும்,

இந்த நாட்டையே அடையத் துடிக்கும் தனக்கு சொந்தமாக ஒரு வீடு இல்லை, இது  எவ்வளவு பெரிய வரலாற்றுத் துயரம் என கூறியிருந்த சீமான் மனைவி கயல்விழி பெயரில் கொடைக்கானலில் 6 ஏக்கர் நிலம் இருப்பதாக யூடியூப் சேனல் ஒன்று சில ஆதாரங்களை வெளியிட்டுள்ளது. இந்த தகவல் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. கிட்டத்தட்ட அந்த சொத்தின் மதிப்பு 10 கோடி ரூபாய் இருக்கும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

இலங்கையில் நடந்த இன அழிப்புக்கு போருக்குப் பின்னர், அதை மையப்படுத்தி தமிழகத்தில் நாம் தமிழர் என்ற கட்சியை நடத்தி வருகிறார் சீமான். அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் ஆகவும் அவர் இருந்து வருகிறார். தனது ஆக்ரோஷமான பேச்சால், இளைஞர்கள் பெண்கள் என அனைத்து தரப்பு மக்களின் மத்தியிலும்  மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளார் ஆவர். இதுவரை  நடந்து முடிந்துள்ள சட்டமன்ற மற்றும் நாடாளுமன்றம் அனைத்து தேர்தலிலும் யாருடனும் கூட்டணி அல்ல தனித்தே போட்டி என்ற கொள்கையுடன் அவர் தேர்தல் களத்தை சந்தித்து வருகிறார் கடந்த சட்டமன்ற தேர்தலில் கிட்டத்தட்ட பத்து லட்சம் வாக்குகளைப் பெற்று தமிழகத்தின் மூன்றாவது மிகப்பெரிய கட்சி என்ற அந்தஸ்துக்கு நாம் தமிழர் கட்சியை உயர்த்தியுள்ளார் அவர். தொடர்ந்து திமுகவையும் திராவிடத்தையும் அவர் குறிவைத்து பேசி வருகிறார். அவரின் பேச்சுக்கள் பல சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில்  கடந்த சில தினங்களுக்கு முன்னர் கடலூரில் நாம் தமிழர் கட்சி நிர்வாகி மறைந்த கடல் தீபன் படத்திறப்பு விழாவில் பேசிய சீமான்,

என்னிடம் எல்லோரும் கேட்கும் ஒரே கேள்வி உங்களுக்கு எங்கிருந்து வருமானம் வருகிறது? எப்படி சாப்பிடுகிறாய் என்கிறார்கள். ஒவ்வொருவரிடம் பணம் பெற்றுக் கொண்டு தான் செலவு செய்கிறேன், எனக்கு வெளிநாட்டிலிருந்து கோடிகோடியாக பணம் வருகிறது என்றும் கூறுகிறார்கள், நான் கேட்கிறேன் வெல்லமண்டி வைத்திருந்த எடப்பாடி பழனிச்சாமி எப்படி இவ்வளவு பெரிய பணக்காரரானார் என கேட்கிறீர்களா? ஜெயலலிதா மார்க்கெட் இல்லாத நடிகையாக தானே வீட்டில் இருந்தார், கடைசி காலத்தில் இவ்வளவு பெரிய சொத்து 800 ஏக்கரில் எஸ்டேட் வாங்குற அளவுக்கு சொத்து எங்கிருந்து வந்தது. இதை அவரிடம் கேட்டு இருக்க வேண்டுமே. திருட்டுத்தனமாக ரயில் ஏறி வந்த கருணாநிதியின் குடும்பத்துக்கு எப்படி இவ்வளவு சொத்து வந்தது என்று கேட்டிருக்கனுமே. ட்ரெயினுக்குகூட காசு இல்லாமல் வந்த உனக்கு இவ்வளவு பணம் எப்படி வந்தது என்று கேட்டீர்களா. தம்பி உதயநிதி தொடர்ச்சியாக படமெடுக்கிறார் ஒரு படம் கூட ஓடவில்லை, ஆனால் தொடர்ந்து உதயநிதி படமெடுக்கிறார் பணம் எப்படி வருகிறது என்று அவரிடம் கேட்டு இருக்க வேண்டுமே இவ்வளவு பெரிய வீடுகளைக் கட்டி வாழ்கிறீர்கள் ஆனால் எனக்கு சொந்தமாக ஒரு வீடு கூட இல்லை, உண்மையில் எனக்கு வீடு இல்லை, இந்த மண்ணில் நான் போராடுகிற காலத்தில், கருணாநிதி ஆட்சியில், ஒரு ஓட்டலில் தங்க கூட எனக்கு அறை தர மாட்டார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா.?

இந்த நாட்டையே அடைய துடிக்கும் எனக்கு வாழ்வதற்கு வீடு இல்லை என்பது எவ்வளவு பெரிய வரலாற்றுத் துயரம் என அவர் கேள்வி எழுப்பியிருந்தார். இது சமூக வலைதளத்தில் வைரல் ஆனது. உண்மையிலேயே சீமானுக்கு வீடு  இல்லையா? என பலரும் ஆச்சர்யத்துடன் சமூக வலைத்தளத்தில் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்நிலையில் யூடியூப் சேனல் ஒன்று, அவரது மனைவி மீது உள்ள சொத்து விவரத்தை சில ஆதாரங்களுடன் வெளியிட்டுள்ளது. அதாவது  சீமானின் மனைவி  கயல்விழியின் பெயரில் கொடைக்கானல் வில்பட்டி என்ற பகுதியில் 6 ஏக்கர் நிலம் உள்ளது என்றும், அது சுற்றுலாப்பயணிகள் வந்து  தங்குகிற பகுதியாக உள்ளது என்றும், அங்கு ஏராளமான ரிசார்ட்டுகள் கொண்ட ஒரு பிரபலமான பகுதியாக உள்ளது என்றும், அப்படிப்பட்ட அந்த பகுதியில்தான் சீமான் மனைவி கயல்விழியின் பெயரில் 6 ஏக்கர் நிலம் உள்ளது என்றும், 3 ஏக்கர் 3 ஏக்கர் வீதம் கயல்விழியின் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும், அதற்கான ஈசி டாக்குமெண்ட் ஆதாரங்களையும் தகவல் வெளியிட்டுள்ளது. அதேபோல அந்த சொத்தின் மதிப்பு வெறும் குறைந்தபட்ச மார்க்கெட் ரேட் 25 லட்சத்திற்கு வாங்கப்பட்டுள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. 

2015 ஆம் ஆண்டு அந்த சொத்து வழங்கப்பட்டுள்ளதாகவும் ஆவணங்களின் தெரிவித்துள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது. ஆனால் முறைப்படி பார்த்தால் அந்த 6 ஏக்கர் நிலத்தையும் குறைந்தது ஆறு கோடி ரூபாய்க்கு வாங்கி இருக்க வேண்டும், ஆனால் குறைந்த மார்க்கெட் ரேட் விலையில் அது வாங்கப்பட்டுள்ளது என்றும், வெறும் 25 லட்சத்திற்கு மட்டுமே அது வாங்கப்பட்டுள்ளதாக அந்த யூடியூப் சேனல் தெரிவித்துள்ளது. ஆனால் உண்மையிலேயே அந்த இடத்தில் 6 ஏக்கர் நிலம் வாங்க வேண்டும் என்றால், ஒரு ஏக்கர் 2 கோடி என  மொத்தம் ஆறு ஏக்கர் 12 கோடி இல்லாமல் வாங்க முடியாது. மொத்தத்தில் கிட்டத்தட்ட 12 கோடி ரூபாய் தன் மனைவியில் பெயரில் சொத்தை கையில் வைத்துள்ள சீமான், உண்மைக்கு புறம்பாக தனக்கு சொந்தமாக ஒரு வீடு கூட இல்லை என பேசி வருகிறார். இந்த ஒரு இடத்தில் இருக்கிற சொத்தின் ஆதாரம் மட்டுமே இது என்றும், இன்னும் எந்தெந்த இடத்தில் இதுபோல சொத்து இருக்கிறது என்பது தெரியாது எனவும் அந்த யூடியூப் சேனல் செய்தி வெளியிட்டுள்ளது. உண்மையிலேயே சீமானுக்கு வீடு இல்லையா என்று கேள்வி எழுப்பி வருவோருக்கு இந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

அமைச்சர் பதவி கிடைக்காது..! பி.டி.ஆரைத் தோற்கடிக்க ஸ்கெட்ச் போடும் தளபதி... திமுகவின் உள்ளடி அரசியல்..!
இவர்களுக்கெல்லாம் சீட் இல்லை..! அதிமுகவில் எடப்பாடியின் ருத்ரதாண்டவம்..! கதிகலங்கும் சீனியர்கள்..!