வைரமுத்து போட்ட பிச்சையில் வளர்ந்தவர் தான் ரஜினி..! சீமான் கடும் தாக்கு

Asianet News Tamil  
Published : Jan 18, 2018, 04:33 PM ISTUpdated : Sep 19, 2018, 01:50 AM IST
வைரமுத்து போட்ட பிச்சையில் வளர்ந்தவர் தான் ரஜினி..! சீமான் கடும் தாக்கு

சுருக்கம்

seeman criticize rajinikanth

வைரமுத்து போட்ட வார்த்தை பிச்சைகளால் பெரிய நடிகராக வளர்ந்த ரஜினிகாந்த், ஆண்டாள் விவகாரத்தில் வைரமுத்துவுக்கு ஆதரவு தெரிவிக்காததிலிருந்து ரஜினி அவரை எவ்வாறு பார்க்கிறார் என்பது தெரிந்துவிட்டது என சீமான் விமர்சித்துள்ளார்.

ஆண்டாள் குறித்த வைரமுத்துவின் பேச்சுக்கு இந்து அமைப்புகள் எதிர்ப்புகள் தெரிவித்து வருகின்றன. பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, வைரமுத்துவை இழிவாக விமர்சித்தார். பாஜக தமிழக துணை தலைவரான நயினார் நாகேந்திரன், வைரமுத்துவின் நாக்கை அறுத்து வருபவருக்கு பரிசுத்தொகை அறிவித்ததோடு, இந்து தெய்வங்களை அவதூறாக பேசுபவர்களை கொலை செய்ய வேண்டும் என சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.

எச்.ராஜா, நயினார் நாகேந்திரன் ஆகியோரின் பேச்சுக்கு இயக்குநர் பாரதிராஜா, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், ரஜினியை வைரமுத்து நண்பராக பார்க்கிறார். வைரமுத்துவின் வரிகளால் வளர்ந்தவர் ரஜினி. வைரமுத்து போட்ட பிச்சைதான் ரஜினியின் வளர்ச்சி. தன்னை நண்பராக பார்க்கும் வைரமுத்துவிற்கு ரஜினி ஆதரவு தெரிவிக்கவில்லை. இதிலிருந்தே வைரமுத்துவை ரஜினி எவ்வாறு பார்க்கிறார் என்பதை புரிந்துகொள்ள முடியும் என சீமான் கடுமையாக விமர்சித்தார்.

PREV
click me!

Recommended Stories

CM Vijay: டைவர்ஸ் கேஸை வாபஸ் வாங்கிய சங்கீதா! சமரசமா? அரசியல் நிர்பந்தமா?
Vijay - Sangeetha: பிரியமானவருக்காக இறங்கி வந்த சங்கீதா விஜய்.! தடைகளை உடைத்து குடும்பத்தை ஒன்று சேர்த்தது யார் தெரியுமா?!