கூட்டணி தர்மத்துக்காக இவரு என்ன வேணும்னாலும் செய்வாரா ? ராமதாசை வறுத்தெடுத்த சீமான் !!

By Selvanayagam PFirst Published Dec 19, 2019, 10:01 AM IST
Highlights

கூட்டணி தர்மத்துகாக குடியுரிமைச் சட்டத் திருத்தத்துக்கு ஆதரவு அளித்தோம்னு சொல்ற ராமதாஸ் அதற்காக தமிழர்களின் உரிமையை அடகு வைப்பாரா ?  என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் காட்டமாக கேள்வி எழுப்பினார்.
 

அண்மையில் நாடாளுமன்ற இரு அவைகளிலும் குடியுரிமை திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத் திருத்தத்துக்கு அதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்திருந்தன. மாநிலங்களவைக்கே வராத அன்புமணி, அன்று வந்து சட்டத்திருத்தத்துக்கு ஆதரவாக வாக்களித்தார்.

அதிமுக, பாமகவின் இந்த செயல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இலங்கைத் தமிழகளுக்கு எதிராக இந்த சட்டத்திருத்தத்துக்கு ஆதரவு அளித்து இரு கட்சிகளும் துரோகம் செய்துவிட்டதாக திமுக, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்டகட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பாமக ராமதாஸ், கூட்டணி தர்மத்துக்காக குடியுரிமைச் சட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தோம் என கூறினார், ராமதாசின் இந்தப் பேச்சும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் குடியுரிமைச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்திய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

அப்போது, “குடியுரிமை திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெறாவிட்டால் உள்நாட்டுப் போர் உருவாகும் அபாயம் ஏற்படும். இந்த விஷயம் நாட்டின் பாதுகாப்புக்காக என்று கூறுவது பைத்தியக்காரத்தனம் என குற்றம்சாட்டினார்.

கூட்டணி தர்மத்துக்காக இந்த மசோதாவை ஆதரித்தோம் என்று ஐயா ராமதாஸ் கூறியதைக் கேட்டதும் அதிர்ச்சியில் உறைந்துபோனேன்” என்று தெரிவித்த சீமான் கூட்டணி தர்மத்துக்காக தமிழர்களின் உரிமைகளை அடகு வைப்பாரா ? ராமதாஸ் என குற்றம் சாட்டினார். 

click me!