அலறவிட்ட யூடியூபர்கள்... தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் எடுத்த அதிரடி முடிவு..!

By Asianet TamilFirst Published Oct 11, 2021, 8:05 AM IST
Highlights

அமைச்சரான பிறகு எனது பழைய நேர்காணல்கள் மற்றும் காணொலிகள் பல்வேறு யூடியூப் சேனல்கள் மற்றும் பிற சமூக வலைதளங்களில் நேர்க்காணல் வழங்கப்பட்ட தேதி அல்லது சூழலை குறிப்பிடாமல் அவை எடிட் செய்யப்பட்டு மீண்டும் பதிவு செய்யப்பட்டு இருப்பது விசித்திரமான ஒன்று என்று தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
 

இதுதொடர்பாக பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ள பதிவில், “2016-இல் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நான், ஒரு எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.வாக இருந்தாலும் தொடர்ந்து பொதுவெளியில் எனது கருத்துகளை பகிர்ந்து வருகிறேன். நான் பல தலைப்புகளில் என்னுடைய அணுகுமுறையை/நிலையை நேர்மையாகவும் வெளிப்படையாகவும் தெரிவித்திருக்கிறேன். பல மாதங்களாக, பல ஆண்டுகளாக அந்த நேர்க்காணல்கள், உரையாடல்களின் காணொலிகள் தமிழ் அல்லது ஆங்கில மொழியாக்கத்துடன் எனது சொந்த சமூக வலைதள பக்கங்கள் / இணையதளம் உட்பட பொதுவெளியில் பகிரப்பட்டுள்ளன.
மே 2021-இல் மதுரை மத்திய தொகுதியிலிருந்து இரண்டாவது முறை சட்டப்பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டேன். முதல்வர் மு.க.ஸ்டாலின் என்னை நிதி மற்றும் மனிதவள மேலாண்மை அமைச்சராக நியமித்தார். அதன்பிறகு 5 மாதங்களில் எனது பழைய நேர்காணல்கள் மற்றும் காணொலிகள் பல்வேறு யூடியூப் சேனல்கள் மற்றும் பிற சமூக வலைதளங்களில் நேர்க்காணல் வழங்கப்பட்ட தேதி அல்லது சூழலை குறிப்பிடாமல் அவை எடிட் செய்யப்பட்டு மீண்டும் பதிவு செய்யப்பட்டு இருப்பது விசித்திரமான ஒன்று.
எனது கொள்கைகளுக்கு உண்மையாக விளங்கும் ஒருவராக, நான் எதிர்க்கட்சியில் இருந்தபோதும் சரி, நான் ஆட்சிப் பொறுப்பில் பங்கேற்ற பிறகும் சரி, எனது நிலைப்பாடுகள் / பார்வைகள் குறிப்பிடத்தக்க வகையில் மாறவில்லை. எனவே காலத்தைக் குறிப்பிடாமல் பகிர்கின்ற இதுபோன்ற திரிபு வேலைகள் மீது எனக்கு எந்த அக்கறையும் இல்லை. எவ்வாறாயினும் எதிர்க்கட்சியாக இருந்தாலும் அல்லது அமைச்சர் பொறுப்பில் இருந்தாலும் எனது கருத்துகள் / நிலைப்பாட்டில் உள்ள நிலைத்தன்மையை நிரூபிக்கும் வகையில், உண்மையான ட்தேதி மற்றும் சூழல் பற்றிய முழு விவரங்களுடன் பழைய காணொலிகளை மீண்டும் பகிருமாறு எனது குழு பரிந்துரைத்துள்ளது.
எனவே, மே 20211-க்கு முன்னர் நான் வழங்கிய நேர்க்காணல்களின் உண்மையான தேதி/சூழலைக் குறிப்பிட்டு அவற்றை மீண்டும் வெளியிட உள்ளோம்.” என்று அமைச்சர் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

click me!