” இனி மாணவிகளை டச் பண்ணா கதை கந்தல்”.. “சில்மிஷ வாத்தியார்களை” அலறவிட்ட அமைச்சர் அன்பில் மகேஷ்.

By Ezhilarasan BabuFirst Published Nov 23, 2021, 6:24 PM IST
Highlights

அதில்  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துகொண்டார். அப்போது செய்தியாளரிடம் பேசிய அவர், தற்போதைய சூழ்நிலையில் சுழற்சிமுறை வகுப்புகளை ரத்து செய்து விட்டு அனைத்து மாணவர்களையும் நேரடியாக வாரத்தில் ஆறு தினங்களும் வகுப்புகளுக்கு வரவேற்கக் கூடிய சாத்தியக்கூறுகள் இல்லை என்று தெரிவித்தார். 

குழந்தைகள் மற்றும் பள்ளி மாணவிகளுக்கு எதிரான குற்றங்களை உடனுக்குடன் அதிகாரிகளுக்கு புகார் தெரிவிக்க 1098 மற்றும் 14417 என்ற இலவச தொலைபேசி பாதுகாப்பு எண்கள் அனைத்து பள்ளிக்கூட வகுப்பறைகளிலும் ஒட்டி வைக்கப்படும் என  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். பள்ளி மாணவிகள் ஆசிரியர்களின் பாலியல் வக்கிரத்திற்கு இரையாகி வரும் நிலையில் அமைச்சர் இவ்வாறு அறிவிப்பு செய்துள்ளார். 

பல இளம் பெண்களை அறையில் அடைத்து பாலியல் வன்புணர்வு செய்து, அடித்து சித்திரவதை செய்த பொள்ளாச்சி காமுகர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து வரும் நிலையில், மீண்டும் ஒரு கொடூர சம்பவம் கோவையில் அரங்கேறியுள்ளது. யாரையும் சும்மா விடக்கூடாது என கடிதம் எழுதி விட்டு தற்கொலை செய்து கொண்ட 11 ஆம் வகுப்பு பள்ளி மாணவியின் மரணம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கியுள்ளது. மாணவியை சதி வலையில் வீழ்த்தி, தகாத முறையில் நடந்து, அந்த மாணவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் பள்ளி ஆசிரியர்கள் மிதுன் சக்கரவர்த்தி, பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் ஆகியோர் போக்ஸோ சட்டத்தின் கைது செய்யப்பட்டுள்ளனர். கோவை ஆர்.எஸ் புரம் சின்மயா பள்ளியில் 17 வயது மாணவி தற்கொலை செய்து கொண்டதற்கு காரணம் பள்ளியில் இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்திதான் என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

மிதுன் சக்கரவர்த்தி அந்த மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டு வந்ததால், கடந்த 6 மாதமாக மன உளைச்சலில் தவித்து வந்த அந்த மாணவி யாரையும் சும்மா விடாதீர்கள் என  கடிதம் எழுதி வைத்து தற்கொலை செய்து கொண்டார். மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்த ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தி மற்றும் அவர் மீது நடவடிக்கை எடுக்காத பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் ஆகியோர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் மாணவிக்கும், மிதுன் சக்கரத்திற்கும் இடையே நடந்த உரையாடல் தொடர்பான ஆடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் மாணவிக்கும் அவரது மனைவிக்கும் இடையே நடந்த உரையாடல் தற்போது வெளியாகியுள்ளது. அதில் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து அந்த மாணவி, ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தி மனைவியிடம் கூறுகிறார்.

அதற்கு அவர் " உன்னிடம் அப்படி நடந்து கொண்ட போதே ஓங்கி கன்னத்தில் அறைய வேண்டியதுதானே" என கூறுவதுடன் இந்த விவகாரம் சாதாரணமானது அல்ல இது பெரிய பிரச்சனை, இது அனைவருக்கும் தெரிய வேண்டும். உடனே இதை தலைமை ஆசிரியர்களின் கவனத்துக்கு கொண்டு சென்று தீர்வு காண்போம் என கூறுகிறார். அதற்கு அந்த மாணவி, எந்த தவறும் செய்யாத என்னை தவறு செய்தது போலவே கூறுகிறீர்களே மேடம். இது என் பெற்றோர்களுக்கு தெரிந்தால் பிரச்சனையாகிவிடும் என்பதனால்தான் மறைத்தேன் என்றும், இந்த விஷயத்தை யாரிடமாவது சொல்ல வேண்டும் அப்படி இல்லை  என்றால் எனக்கு மண்டையே வெடித்து விடும் போல் இருக்கிறது எனக்கூறி கதறும் சோகம் அதில் நிறைந்துள்ளது.

இந்நிலையில் இந்த விவகாரத்தில் உரியவர்களுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் என தமிழகம் முழுவதும், ஆதங்க குரல் எழுந்துள்ளது. ஏற்கனவே இது குறித்து கருத்து தெரிவித்திருந்த, தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அந்த மாணவிக்கு ஏற்பட்ட சம்பவம் எனது மகளுக்கு ஏற்பட்டதுபோலவே நான் உணர்கிறேன். நிச்சயம் இதில் தொடர்புடையவர்கள் தண்டிக்கப்படுவார்கள். அரசு பள்ளி ஆசிரியர்களை பொருத்தவரையில் போக்சோ சட்டம் குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகளுக்கு இது தொடர்பாக முன்னெடுப்புகளை மேற்கொள்ள உள்ளோம் எனக் கூறியிருந்தார். இந்நிலையில் சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நல் நூல்களுக்கான அரங்கநாதன் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அதில்  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துகொண்டார். அப்போது செய்தியாளரிடம் பேசிய அவர், தற்போதைய சூழ்நிலையில் சுழற்சிமுறை வகுப்புகளை ரத்து செய்து விட்டு அனைத்து மாணவர்களையும் நேரடியாக வாரத்தில் ஆறு தினங்களும் வகுப்புகளுக்கு வரவேற்கக் கூடிய சாத்தியக்கூறுகள் இல்லை என்று தெரிவித்தார். பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு என்பதால் அவர்கள் அன்றாடம் பள்ளிகளுக்கு  வருமாறு கூறப்பட்டுள்ளது என்றார். மாணவர்களின் பாதுகாப்பு கருதியும் மாணவர்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களை கலையவும், 1098 மற்றும் 14417 ஆகிய குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து புகார் அளிப்பதற்கான உதவி எண்கள் அனைத்து வகுப்பறைகளல்ளிலும் ஒட்டப்படுமெனவும் கூறினார். மேலும் 5 லட்சத்து 80 ஆயிரம் மாணவர்கள் புதிதாக அரசுப் பள்ளியில் சேர்த்துள்ளதாகவும் தெரிவித்தார். 
 

click me!