Kovai Student Suicide: நெஞ்சை பதறவைக்கிறது.. மாணவியின் தற்கொலைக்கு இவர்களும் தான்.. ஒரே போடாக போட்ட கனிமொழி.!

By vinoth kumarFirst Published Nov 13, 2021, 12:20 PM IST
Highlights

ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி, எலிசா சாருவோட அப்பா, ரீத்தாவோட தாத்தா உள்பட யாரையும் சும்மா விடக்கூடாது கூறப்பட்டிருந்தது. இதனையடுத்து, தற்கொலை காரணமாக இருந்த ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி கைது செய்து உடுமலைப்பேட்டையில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

கோவையில் ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததால் 12ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் தனியார் பள்ளி நிர்வாகத்தின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக எம்.பி. கனிமொழி வலியுறுத்தியுள்ளார்.

கோவை கோட்டைமேடு பெருமாள் கோயில் வீதியை சேர்ந்தவர் மகுடேஸ்வரன். சாலையோரம் தள்ளுவண்டியில் பலகாரம் விற்பனை செய்து வருகிறார். இவருக்கு இரு மகள்கள் உள்ளனர். மூத்த மகள் பொன்தாரணி (17), ஆர்.எஸ்.புரத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். அதே பள்ளியில், இயற்பியல் ஆசிரியராக பணிபுரியும் மிதுன் சக்கரவர்த்தி என்பவர், இந்த மாணவிக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இது தொடர்பாக பள்ளி நிர்வாகத்திடம் பாதிக்கப்பட்ட மாணவி மற்றும் பெற்றோர் புகார் தெரிவித்தனர்.

ஆனால், இந்த விஷயம் வெளியில் தெரிந்தால் பள்ளியின் பெயர் கெட்டுவிடும் என்பதால் மிதுன் சக்கரவர்த்தி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனையடுத்து, அவரை அவரது பெற்றோர் ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள மாநகராட்சிப் பள்ளியில் கடந்த செப்டம்பர் மாதம் சேர்த்தனர். வேறு பள்ளி மாறினாலும் அவர் தொடர்ந்து பாலியல் ரீதியான டார்ச்சரை தொடர்ந்து வந்துள்ளார். இந்நிலையில், மனஉளைச்சலில் இருந்து வந்த பொன் தாரணி பெற்றோர் இல்லாத நேரத்தில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வெளியில் சென்ற பெற்றோர் வீட்டிற்கு வந்து பார்த்த போது மகள் தூக்கில் சடலமாக தொங்கியதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். 

இந்த தற்கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதனிடையே, அவரை அறையை சோதனையிட்ட போது கடிதம் ஒன்று சிக்கியது. அதில், ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி, எலிசா சாருவோட அப்பா, ரீத்தாவோட தாத்தா உள்பட யாரையும் சும்மா விடக்கூடாது கூறப்பட்டிருந்தது. இதனையடுத்து, தற்கொலை காரணமாக இருந்த ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி கைது செய்து உடுமலைப்பேட்டையில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவத்திற்கு கமல்ஹாசன், கனிமொழி உள்ளிட்ட தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். 

இதுதொடர்பாக திமுக எம்.பி. கனிமொழி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- ஆசிரியர் கொடுத்த, பாலியல் தொல்லைக் காரணமாகக் கோவையைச் சேர்ந்த பள்ளி மாணவி தற்கொலைச் செய்து கொண்ட சம்பவம் பதறவைக்கிறது. தனக்கு நேர்ந்த தொடர் பாலியல் தொல்லை பற்றி பலமுறை சொல்லியும் எந்த நடவடிக்கையும் எடுக்காத பள்ளி நிர்வாகத்தின் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும். 

ஆசிரியர் கொடுத்த, பாலியல் தொல்லைக் காரணமாகக் கோவையைச் சேர்ந்த பள்ளி மாணவி தற்கொலைச் செய்து கொண்ட சம்பவம் பதறவைக்கிறது. தனக்கு நேர்ந்த தொடர் பாலியல் தொல்லை பற்றி பலமுறை சொல்லியும் எந்த நடவடிக்கையும் எடுக்காத பள்ளி நிர்வாகத்தின் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும். (1/2)

— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK)

மாணவர்களின் குரலுக்குச் செவி கொடுத்திருந்தால், குற்றம் நிகழ்வதைத் தக்க நேரத்தில் தடுத்திருக்க முடியும் என ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

click me!