
டிடிவி தினகரன் தேச துரோகமா செய்து விட்டார் என ஆதரவு குரல் எழுப்பி உள்ளார் அதிமுகவை சேராத திருநாவுகரசர்.
ஜெயலலிதா மறைந்தவுடன் தான் சார்ந்திருக்கும் கட்சியை மறந்து விட்டு டிபிக்கல் சசிகலா குடும்பத்து ஆதரவாளராகவே மாறிவிட்டிருந்தார் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர்.
தொடர்ந்து கூட்டணி கட்சியான திமுகவை எரிச்சல் படுத்தும் விதத்திலும் தான் சார்ந்திருக்கும் காங்கிரஸ் கட்சியினை கடுப்பேற்றும் வேலைகளையும் கன கட்சிதமாக செய்து வந்தார் திருநாவுகரசர்.
சசிகலா குடும்பத்திற்கு திருநாவுகரசர் அடித்த ஜால்ராவை கண்டு அரண்டு போன ப.சிதம்பரம், இளங்கோவன், குஷ்பூ, தங்கபாலு, உளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் ராகுலிடம் புகார் செய்ததையடுத்து நேரில் அழைத்து கண்டிக்கபட்டார் திருநாவுக்கரசு.
அதனால் சற்று அடக்கி வசித்து வந்த அவர் தற்போது மீண்டும் தினகரனுக்கும் சசிகலா குடும்பத்திற்கும் ஆதரவாக கருத்துகளை தெரிவிக்க தொடங்கி உள்ளார்.
தினகரன் கைது செய்யப்பட்டது குறித்து செய்தியாளரிடம் கருத்து தெரிவித்த திருநாவுகரசர் அதிமுகவில் பலமில்லாத ஒரு அணியை (ஒ.பி.எஸ் அணி) பலமாக்குவதற்கு இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலும் தினகரனை பொறுத்தவரை கடுமையான குற்றமோ, தேச விரோத செயலிலோ ஈடுபட வில்லை என எதிர்கட்சியில் உள்ள பிரமுகருக்கு சப்பை கட்டு கட்டியுள்ளார் எதிர்கட்சியை சேர்ந்த திருநாவுகரசர்.
தமிழகத்தின் பிரதான எதிர்கட்சியான திமுகவின் கூட்டணி கட்சியில் இருக்கும் காங்கிரஸ் கட்சியில் இருந்து கொண்டு அதிமுக சசிகலா அணிக்கு சொம்பு தூக்குகிறார் என கடுப்போடு கிண்டல் செய்கின்றனர் தமிழகத்தின் மூத்த காங்கிரஸ் தலைவர்கள்.