மீண்டும் சிறை செல்லும் சசிகலா…. பரோல் முடிவடைந்ததையடுத்து பெங்களூரு செல்கிறார்!!

Asianet News Tamil  
Published : Mar 31, 2018, 06:41 AM ISTUpdated : Sep 19, 2018, 02:11 AM IST
மீண்டும் சிறை செல்லும் சசிகலா…. பரோல் முடிவடைந்ததையடுத்து பெங்களூரு செல்கிறார்!!

சுருக்கம்

sasikala today go back to bangalore jail

கணவர்  நடராஜனின் மறைவையொட்டி பரோலில் தஞ்சை வந்த சசிகலா, இன்று மீண்டும் பெங்களூரு சிறைக்கு செல்கிறார்.

சசிகலாவின் கணவரும், புதிய பார்வை ஆசிரியருமான ம.நடராஜன் உடல் நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் இன்றி கடந்த 20-ந் தேதி காலமானார். அவரது உடல் சென்னையில் இருந்து தஞ்சை அருளானந்த நகரில் உள்ள அவருடைய வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது.

நடராஜன் இறந்த தகவல் பெங்களூரு சிறையில் இருந்த சசிகலாவுக்கு தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அவர் தனது கணவரின் இறுதி சடங்கில் பங்கேற்க பரோல் கேட்டு சிறை நிர்வாகத்திடம் விண்ணப்பித்தார்.

சிறை நிர்வாகம் மூன்று நிபந்தனைகளை விதித்து சசிகலாவுக்கு பரோல் வழங்கியது. இதனைத்தொடர்ந்து அவர் பெங்களூரு சிறையில் இருந்து கடந்த 20-ந் தேதி மதியம் கார் மூலம் புறப்பட்டு இரவில் தஞ்சைக்கு வந்தார்.

தஞ்சை வந்த சசிகலா தனது கணவரின் உடலை பார்த்து கதறி அழுதார். பின்னர் அவர் பரோல் காலம் முழுவதும் தஞ்சை அருளானந்த நகரில் உள்ள நடராஜன் வீட்டில் தங்கி இருந்தார். இதைத் தொடர்ந்து நடராஜனின் நினைவேந்தல் கூட்டத்திலும் அவர் பங்கேற்றார். இந்த நிலையில் நேற்றுடன் சசிகலாவுக்கு பரோல் முடிவடைந்தது.

இதையடுத்து தஞ்சை அருளானந்த நகரில் உள்ள  அவரது வீட்டில் இருந்து இன்றுகாலை 10.30 மணிக்கு சசிகலா, கார் மூலம் பெங்களூரு சிறைக்கு புறப்பட்டு செல்கிறார்.

PREV
click me!

Recommended Stories

விஜய் மட்டுமே முழு காரணம்.. கரூரை மீண்டும் கையிலெடுத்த திமுக.. கடுமையான விமர்சனம்!
திமுக ஆட்சியில் தலைதூக்கிய துப்பாக்கி கலாசாரம்.. போட்டுத் தாக்கிய அதிமுக!