“சசிகலா புஷ்பாவின் படங்களை தவறாக வெளியிடுவோர் மீது நடவடிக்கை” - டெல்லி உயர்நீதிமன்றம்

Asianet News Tamil  
Published : Oct 05, 2016, 05:49 AM ISTUpdated : Sep 19, 2018, 03:13 AM IST
“சசிகலா புஷ்பாவின் படங்களை தவறாக வெளியிடுவோர் மீது நடவடிக்கை” - டெல்லி உயர்நீதிமன்றம்

சுருக்கம்

அதிமுக தலைமைக்கு எதிராக பேசியதால் கட்சியிலிருந்து இருந்து நீக்கப்பட்டார்  மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா.

அதைதொடர்ந்து சசிகலாவின் வீட்டில்  வேலை பார்த்த பானுமதி, ஜான்சி ஆகியோர் சசிகலா புஷ்பா, அவரது கணவர் மற்றும் மகன் உள்ளிட்டோர்மீது பாலியல் புகார் அளித்தனர்.  

பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய சசிகலா புஷ்பாவும், திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவாவும் நெருக்கமாக இருக்கும் புதிய புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

இதனையடுத்து தன்னை தவறாக சித்தரிக்கும் படங்களை நீக்க வேண்டும் என சசிகலா புஷ்பா டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், வாட்ஸ் அப், பேஸ்புக், டிவிட்டர் மூலம் சசிகலா புஷ்பா பற்றி தவறாக படம் வெளியிடுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

PREV
click me!

Recommended Stories

TN AGRI BUDGET: திராவிட கட்சிகள் செய்யாததை செய்தாரா விஜய்?! முதல் வேளாண் பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்..!
Tamil Nadu Agri Budget: இனி தடையில்லா விவசாயம் சாத்தியம்..! இலவச மின்சாரத்துக்காக ரூ.7,432 கோடி ஒதுக்கீடு..!