அதிருப்தியாளர்களை சரிகட்டவே சசிகலா 3 முறை நேரில் வந்தார் – அருண்குமார் எம்எல்ஏ பகீர்

 
Published : Feb 19, 2017, 11:45 AM ISTUpdated : Sep 19, 2018, 01:36 AM IST
அதிருப்தியாளர்களை சரிகட்டவே சசிகலா 3 முறை நேரில் வந்தார் – அருண்குமார் எம்எல்ஏ பகீர்

சுருக்கம்

கடந்த டிசம்பர் 5ம் தேதி ஜெயலலிதா காலமானார். இதையடுத்து ஓ.பி.எஸ். முதலமைச்சராகவும், சசிகலா அதிமுக பொது செயலாளராகவும் பொறுப்பேற்றனர். இதைதொடர்ந்து கடந்த 5ம் தேதி ஓ.பன்னீர்செல்வம் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

பின்னர், சசிகலா அதிமுக சட்டமன்ற கட்சி தலைவராகவும், முதலமைச்சராகவும் தேர்வு செய்யப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஓ.பி.எஸ். தனி அணியை உருவாக்கினார். இதனால், அதிமுகவில் பிளவு ஏற்பட்டு, இரண்டாக பிரிந்துள்ளது.

சசிகலா தரப்பினர், தங்களை ஆட்சி அமைக்க அழைக்கும்படி கவர்னரை வலியுறுத்தி வந்தனர். அதே நேரத்தில், அதிமுக எம்எல்ஏக்களை, சசிகலா தரப்பினர் மிரட்டி கடத்தி வைத்துள்ளதாகவும், சசிகலாவுக்கு பதவி பிரமாணம் செய்ய கூடாது எனவும் ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் கவர்னரிடம் மனு கொடுத்தனர்.

சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்கு சென்றார். இதனால், எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டு, பதவி பிரமாணம் நடந்தது. அப்போது, 15 நாட்களுக்குள் தனிப்பெரும்பான்மை காட்ட வேண்டும் என கவர்னர் உத்தரவிட்டார்.

இதைதொடர்ந்து நேற்று சிறப்பு சட்டமன்ற கூட்டம் நடந்தது. அதில், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக அறிவிக்கப்பட்டார். இதில், சில எம்எல்ஏக்கள் கலந்து கொள்ளவில்லை.

கோல்டன் பே ரிசார்ட்டில் இருந்து யாருக்கும் தெரியாமல், கோவை வடக்கு தொகுதி எம்எல்ஏவும், அதிமுக கோவை மாநகர மாவட்ட செய லாளருமான பி.ஆர்.ஜி.அருண்குமார் தப்பிவிட்டார். நேற்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் அவர் கலந்து கொள்ளவில்லை. அவரது வீட்டுக்கு சென்று தஞ்சம் அடைந்தார்.

இதை அறிந்ததும், அப்பகுதி அதிமுகவினர் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் அங்கு திரண்டனர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் நேற்று மாலை வரை அவரது வீட்டுக்கு சென்று விசாரித்தனர்.

அப்போது, செய்தியாளர்களிடம் அருண்குமார் பேசியதாவது:- முன்னாள் முதல்வர் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரால் கட்டுப்பாட்டுன், எஃகு கோட்டை போல் நடத்தப்பட்ட அதிமுக என்ற இயக்கத்தில், தங்களது குடும்பதையும், உறவினர்களையும் சேர்க்கவில்லை.

ஜெயலலிதாவால் ஒதுக்கி வைக்கப்பட்டவர்கள், அதிமுகவிர் அதிகார பதவியில் அமர பார்க்கிறார்கள். இதனை கட்சியினர் யாரும் ஏற்க மாட்டோம். எனது மனசாட்சியின்படியும், மக்கள் கோரிக்கையை ஏற்றும் சட்டமன்றத்தில் நடக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் வந்துவிட்டேன்.

கூவத்தூர் ரிசார்ட்டில் எங்களை அடைத்து வைத்தனர். அப்போது, நாங்கள் ஒரு குழுவாக சேர்ந்து, எங்களது கருத்துகளை தெரிவித்தோம். அதனை அவர்கள் ஏற்கவில்லை. இதையடுத்து, அவர்களின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தோம். இதனால், அதிர்ச்சியடைந்த சசிகலா, எங்களை பார்க்க 3 முறை, எங்களை பார்க்க ரிசார்ட்டுக்கு வந்தார். எங்களை சமாதானம் செய்தார்.

ஆனாலும், நாங்கள் வைத்த கோரிக்கைகளை அவர்கள், ஏற்கவில்லை. அதே நேரத்தில் எம்எல்ஏக்களை மிரட்டியதாகவும், பணம் கொடுத்ததாகவும் கூறப்படுவது முற்றிலும் பொய். எங்களது கோரிக்கையை ஏற்காதபோது, அவர்களது பிடியில் இருக்க கூடாது என நான் வெளியேறிவிட்டேன்.

வீட்டுக்குள் நுழைய கூடாது என ஜெயலலிதாவால், விரட்டபட்ட டி.டி.வி.தினகரனை, கட்சியில் சேர்த்து, ஒரே நாளில் அவரை துணை பொதுச் செயலாளராகவும் நியமித்ததை யாரும் ஏற்கமாட்டார்கள். எனக்கு பணம், பதவி, செல்வாக்கு முக்கியமல்ல. பொதுமக்கள் மற்றும் அதிமுக தொண்டர்களின் ஆதரவு போதும் என நினைத்து நான் அவர்களிடம் இருந்து விலகிவிட்டேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

PREV
click me!

Recommended Stories

நான் காமராஜரை பற்றி பேசியதை வதந்தி பரப்புகிறார்கள்..! மன்னிப்புக்கேட்ட முக்தார்..!
திமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் காணாமல் போய்விடுவார்கள்..! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கொக்கரிப்பு