ஜெயலலிதாவை பார்த்த அன்றைக்கே சசிகலாவின் சந்தோஷம் போயிடுச்சு!! திவாகரன் வேதனை

First Published Mar 30, 2018, 2:12 PM IST
Highlights
sasikala lost her happy for last thirty five years said divakaran


தனது சகோதரியான சசிகலா, கடந்த 35 ஆண்டுகளாகவே நிம்மதியாகவே இல்லை என திவாகரன் தெரிவித்துள்ளார்.

புதிய பார்வை ஆசிரியரும் சசிகலாவின் கணவருமான நடராஜனின் உருவப்படம் திறப்பு விழா தஞ்சையில் நடைபெற்றது. இந்த விழாவில், திராவிடர் கழக தலைவர் வீரமணி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, தா.பாண்டியன், இயக்குநர் பாரதிராஜா, கவிஞர் வைரமுத்து உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

இந்த விழாவில் பேசிய சசிகலாவின் சகோதரர் திவாகரன், சசிகலா நிம்மதியாக இல்லை. அவர் நிம்மதியை இழந்து 35 ஆண்டுகள் ஆகிறது. அன்று முதல் இன்று வரை நிம்மதி இல்லாமலே இருக்கிறார் என வருத்தம் தெரிவித்தார்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுடன் சசிகலாவிற்கு பழக்கம் ஏற்பட்டு 35 ஆண்டுகள் ஆகிறது. அப்படியென்றால், ஜெயலலிதாவுடனான பழக்கம் ஏற்பட்டதிலிருந்தே சசிகலா நிம்மதியை இழந்துவிட்டதாக திவாகரன் கூறியிருக்கிறார். ஜெயலலிதாவிற்கு உறுதுணையாக இருந்த சசிகலாவிற்கு எந்த பாதுகாப்பையும் ஏற்படுத்தாமல் ஜெயலலிதா இறந்துவிட்டார் என திவாகரன் ஏற்கனவே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. 
 

click me!