உடனே அபராத தொகை கட்டுங்க.. சீக்கிரமாக வெளியே வரவேண்டும்.. பெங்களூர் சிறையில் இருக்கும் சசிகலா பரபரப்பு கடிதம்

By vinoth kumarFirst Published Oct 19, 2020, 5:44 PM IST
Highlights

நன்னடத்தையை காரணம் காட்டி விரைவில் வெளியில் வருவதற்கான நடவடிக்கைகளில் சசிகலா தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

நன்னடத்தையை காரணம் காட்டி விரைவில் வெளியில் வருவதற்கான நடவடிக்கைகளில் சசிகலா தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் 4 ஆண்டு சிறைத் தண்டனை பெற்று பெங்களூர் அக்ரஹாரா சிறையில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் தண்டனை அனுபவித்து வருகின்றனர். அவர் நன்னடத்தை அடிப்படையில் முன்கூட்டியே வெளியே வருவார் என்ற செய்திகள் வெளிவந்துகொண்டிருக்கின்றன. சொத்துக் குவிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட ரூ.10 கோடி அபராதத்தொகையை அவர் இன்னும் செலுத்தவில்லை.  

இந்நிலையில், சசிகலாவின் வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியனுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் நாங்கள் நலமாக இருக்கிறோம். கொரோனா காரணமாக தமிழக மக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளதாக வரும் செய்திகள் எனக்கு வேதனையளிக்கிறது. கொரோனா நோய் தொற்றுப் பரவலினால் தமிழகத்தில் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது என்பதும் எனக்கு மிகுந்த கவலை அளிக்கிறது. விரைவில் தமிழக மக்களும், பிற மாநில மக்களும் கொரோனா நோய் தொற்றிலிருந்து முற்றிலுமாக மீண்டு சகஜ நிலை திரும்ப மனதார இறைவனை தினமும் வேண்டி வருகிறேன்.

கொரோனா காரணமாக 2020 மார்ச் மூன்றாம் வாரத்திலிருந்து, ‘நேர் காணல்’களை கர்நாடக சிறைத் துறை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. எப்போது நேர் காணல் அனுமதி அளிக்கப்படும் என்பதும் இதுவரை உறுதியாகத் தெரியவில்லை”. சிறைத்துறை எனது நன்னடத்தை ரெமிஷன் விஷயத்தில் விரைவில் சட்டப்படியாக முடிவெடுப்பார்கள் என்று நம்புகிறேன். உத்தரவு கிடைத்தவுடன் தெரிவிக்கிறேன். அதன்படி அபராதத்தொகையை முறைப்படி நீதிமன்றத்தில் செலுத்த ஏற்பாடு செய்யவும். 

கர்நாடக நீதிமன்றத்தில் அபராதத்தொகையை கட்டிய பிறகு உச்ச நீதிமன்றத்தில் கடந்த 2017 தீர்ப்பு வழக்கு விஷயத்தில் சட்டப்படியாக தீர்ப்பு நகலில் திருத்தங்கள் தொடர்பான மனுவை தாக்கல் செய்ய இயலுமா என்பதனை மீண்டும் டெல்லி மூத்த வழக்கறிஞர்களிடம் உறுதி செய்யவும். அதுபற்றி டிடிவி தினகரனிடம் ஆலோசித்து செயல்படவும்” என்று கூறப்பட்டுள்ளது. இதன்மூலம் நன்னடத்தையை காரணம் காட்டி விரைவில் வெளியில் வருவதற்கான நடவடிக்கைகளில் சசிகலா தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

click me!