சிறையில் இருந்தாலும் இந்திய அளவில் டிரெண்டிங்காகும் #HBDசின்னம்மா என்ற ஹேஸ்டேக்..!

Published : Aug 17, 2020, 01:36 PM ISTUpdated : Aug 17, 2020, 02:52 PM IST
சிறையில் இருந்தாலும் இந்திய அளவில் டிரெண்டிங்காகும்  #HBDசின்னம்மா என்ற ஹேஸ்டேக்..!

சுருக்கம்

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா நாளை பிறந்த நாளையோட்டி #HBDசின்னம்மா என்ற ஹேஸ்டேக் இந்திய அளவில் முதலிடத்தில் டிரெண்டிங்கில் உள்ளது. 

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா நாளை பிறந்த நாளையோட்டி #HBDசின்னம்மா என்ற ஹேஸ்டேக் இந்திய அளவில் முதலிடத்தில் டிரெண்டிங்கில் உள்ளது. 

சொத்து குவிப்பு வழக்கில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பனஅக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். சசிகலாவிற்கு ஆகஸ்ட் 18ம் தேதி பிறந்தநாள். ஜெயலலிதா உயிரோடு இருந்தவரைக்கும் ஒவ்வொரு ஆண்டும் அவரது காலில் விழுந்து ஆசி வாங்குவதோடு முதல் வாழ்த்தும் பரிசும் ஜெயலலிதா கைகளில் இருந்து பெற்றுக்கொள்வார் சசிகலா. அவரது மரணத்திற்குப் பிறகு சசிகலா பிறந்தநாளை கொண்டாடுவதில்லை. இதனால், ஒவ்வொரு பிறந்த நாள் அன்றும் சசிகலா சிறையில் மவுனம் விரதம் இருந்து வருகிறார். 

இந்நிலையில், நாளை ஆகஸ்ட் 18ம் தேதியன்று சசிகலாவின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாட்டில் பல பகுதிகளில் அவரது ஆதரவாளர்கள் போஸ்டர் ஒட்டி வருகின்றனர். அதில், தமிழகத்தின் குல தெய்வமே என்றும், தமிழகத்தின் எதிர்பார்ப்பே என்ற வாசகங்கள் அடங்கிய போஸ்டர்களையும் ஒட்டி சசிகலாவை வணங்கியுள்ளனர். மேலும், இந்த ஆண்டும் பிறந்தநாளன்று சிறையில் மவுன விரதம் இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

 

அதே நேரத்தில் சசிகலாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ஆதரவாளர்கள் மதுரையில் போஸ்டர் ஒட்டி தெறிக்க விட்டு வரும் நிலையில் #HBDசின்னம்மா என்ற ஹேஸ்டேக் இந்திய அளவில் முதலிடத்தில் டிரெண்டிங்கில் இருந்து வருகிறது.

PREV
click me!

Recommended Stories

பாஜகவையே பைபாஸ் செய்யும் எடப்பாடி... கையை பிசையும் அமித் ஷா அண்ட் கோ..!
மதம் உண்மையில் பிரபஞ்சத்தின் அறிவியல்..! மோகன் பகவத் அசத்தல் விளக்கம்..!