ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை! சசிகலா பிரமாணப் பத்திரம் தாக்கல்!

First Published Mar 12, 2018, 1:12 PM IST
Highlights
Sasikala filed the affidavit in the Commission of Inquiry


முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்தில் சசிகலா தரப்பில் அவருடைய வழக்கறிஞர் அரவிந்தன் ஆஜராகி பிரமாண பத்திரம் தாக்கல் செய்தார்.

ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகின்றது. அதில் ஜெயலலிதாவின் நண்பர்கள், உறவினர்கள், என அனைத்து தரப்பினரிடமும் கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன. இதனிடையே ஜெயலலிதா மரணம் குறித்து விளக்கம் கேட்டு சசிகலாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. 

ஆனால் ஜெயலலிதா மரணத்தில் தனக்கு பங்கு இருப்பதாக புகார் கொடுத்தது யார் என்று கூறினால் மட்டுமே தன்னால் சம்மனுக்கு பதில் தர முடியும் என நீதிபதி ஆறுமுகசாமியிடம் சசிகலா தரப்பு தெரிவித்தது. 

இதையடுத்து அதற்கு விசாரணை ஆணைமும் ஒப்புதல் அளித்தது. இந்நிலையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக 2,956 பக்க ஆவணங்களை சசிகலா தரப்பிடம் விசாரணை ஆணையம் சமர்ப்பித்துள்ளது. படித்துவிட்டு 15 நாட்களுக்குள் பிரமான பத்திரத்தை தாக்கல் செய்யுமாறு சசிகலாவுக்கு ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் உத்தரவிட்டிருந்தது. 

ஆனால் மீண்டும் கால அவகாசம் கேட்டு சசிகலா தரப்பு மனு அளிக்கப்பட்டது. ஆனால் ஏற்கனவே சசிகலாவுக்கு 5 முறை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் முறையான பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்யவில்லை என்றால் ஜெயலலிதா மரணத்தில் உங்களுக்கு எதிராக முடிவு எடுக்கப்படும் எனவும் கூறி விசாரணை ஆணையம் சசிகலா மனுவை தள்ளுபடி செய்திருந்தது.

இந்த நிலையில் சசிகலாதரப்பில் வழக்கறிஞர் அரவிந்தன் விசாரணை ஆணையத்தில் இன்று ஆஜராகானர். வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியனுக்கு பதிலாக அரவிந்தன் ஆஜராகி பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆணையத்திடம் சசிகலா சார்பில் பிரமாண பத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஒரு மனுவும் தாக்கல் செய்யப்பட்டது. இனி விசாரணை ஆணையத்துக்கு அழைக்கக் கூடியவர்கள் தகவலை முன்கூட்டியே எங்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று ஆணையத்திடம் கூறியுள்ளதாகவும் வழக்கறிஞர் அரவிந்தன் கூறினார்.

click me!