“ஆட்சி அமைக்க அழைக்காவிட்டால் தற்கொலை செய்து கொள்வேன்” – போலி கடிதத்தால் சசிகலா கொந்தளிப்பு

 
Published : Feb 12, 2017, 07:46 PM ISTUpdated : Sep 19, 2018, 01:05 AM IST
“ஆட்சி அமைக்க அழைக்காவிட்டால் தற்கொலை செய்து கொள்வேன்” – போலி கடிதத்தால் சசிகலா கொந்தளிப்பு

சுருக்கம்

தன் பெயரில் ஆளுநருக்கு மிரட்டல் கடிதம் எழுதியுள்ளதாக போலியான தகவல் வெளியாகி வருகிறது. இது மிகவும் தவறான செயல் என அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா வினவியுள்ளார்.

எம்.எல்.ஏக்களின் ஆதரவு பட்டியலை ஆளுநரிடம் வழங்கியும் சசிகலாவை பொறுப்பேற்க ஆளுநர் இதுவரை அழைக்கவில்லை.

இதனால் சசிகலா தரப்பு மிகவும் நெருக்கடிக்கு ஆளாகி வருகின்றனர்.

இதனிடையே சசிகலா தரப்பில் இருந்த எம்.எல்.ஏக்களும், எம்.பிக்களும், அமைச்சர்களும் கொஞ்சம் கொஞ்சமாக பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

மேலும் திரை பிரபலங்களும், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.எல்.ஏக்களும் அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

சின்னம்மா சின்னம்மா என்று கோஷம் போட்டவர்கள் எல்லாம் ஓ.பி.எஸ் பக்கம் சாய்ந்தது சசிகலாவுக்கு மன வேதனையை கொடுத்துள்ளது.

வடிவேல் பாணியில் சொல்ல போனால் “பில்டிங் ஸ்ட்ராங், பேஸ்மட்டம் வீக்” என்ற நிலைமைதான் சசிகலாவுக்கு நிகழ்ந்து வருகிறது.  

இந்நிலையில், சசிகலாவுக்கு எதிராக வலைதளங்களில் திடீர் புரளி ஒன்று கிளம்பியுள்ளது.

அதாவது, ஆட்சி அமைக்க அழைக்காவிட்டால் தற்கொலை செய்து கொள்வேன் என சசிகலா ஆளுநருக்கு எழுதியது போல் கடிதம் ஒன்று சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.

இதையறிந்த சசிகலா கூவத்தூர் செல்லும் முன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, நான் ஆளுநருக்கு மிரட்டல் கடிதம் எழுதியது போல் சித்தரித்து சமூக வலைதளங்களில் யாரோ சிலர் சதிவேலை செய்கின்றனர்.

நான் ஆளுநருக்கு எவ்வித கடிதமும் எழுதவில்லை.

சிலரின் இத்தகைய செயல் மிகவும் கண்டிக்கத்தக்கது என கோபமாக கூறினார்.

 

PREV
click me!

Recommended Stories

திமுகவுக்கு பேரிடி... அதிமுகவுக்கு சவுக்கடி..! கூட்டணி பலமானால் விஜயே முதல்வர்..! அதிரடி சர்வே..!
கழுத்தை நெறிக்கும் சிபிஐ..! டெல்லிக்கு வர விஜய்க்கு உத்தரவு..!