ஃப்ரீ பிரமோஷனுக்கு ப்ளான் போட்ட முருகதாஸ் விஜய்! உஷாரான பாஜக... உள்ளே புகுந்த பாமக!

 
Published : Jun 22, 2018, 05:36 PM ISTUpdated : Sep 19, 2018, 02:33 AM IST
ஃப்ரீ பிரமோஷனுக்கு ப்ளான் போட்ட முருகதாஸ் விஜய்! உஷாரான பாஜக... உள்ளே புகுந்த பாமக!

சுருக்கம்

Sarkar movie team target BJP for free promotion

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகும் படத்திற்கு தலைப்போடு ஸ்டைலிஷ் லுக் ஒன்றை வெளியிட்டனர். படத்தின் தலைப்பாக 'சர்கார்'  என வைத்துள்ளனர். இந்த முதல் பார்வை வெளியான சில மணி நேரத்திலேயே முதல் சர்ச்சையில் சிக்கியது விஜயின் இந்த லுக் அதாவது இந்த போஸ்டரில் விஜய் சிகரெட் பிடிப்பது போன்ற வெளியான இதை பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் எதிர்ப்பை காட்டினார்.

அன்புமணியின் இந்த எதிர்ப்பை அடுத்து ரசிகர்களும், ஆஹா மெர்சலுக்கு பாஜக, சர்காருக்கு பாமக என ஹேப்பியாக இருந்தார்கள். படக்குழுவும் பதில் சொல்லாமல் ஃபிரீ பிரமோஷன் தானே என சைலன்ட்டாக இருந்தது.

அதுமட்டுமல்ல, விஜய், முருகதாஸ் மற்றும் பட நிறுவனமான சண் பிக்சர்ஸ் ப்ளான் போட்டது என்னவோ பஜகவிருக்கு தானாம் ஆனால், தேவையில்லாமல் பாமக வந்து வம்பிழுக்கிறதே என யோசித்ததாம், சரி எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும் இதுவும் நமக்கு இலவச விளம்பரம் தானே என வேடிக்கை பார்க்கிறதாம் படக்குழு.

ஆமாம் அதென்ன பாஜகவிற்கு ஸ்கெட்ச்?  சர்கார் என்ற வார்த்தை இந்தியர்களுக்கு கடந்த சில வருடங்களாக அதிகம் அறிமுகமானதுதான் மோடி தான். "ஆப் கி பார் மோடி சர்கார்" என்ற கோஷத்தோடுதான் இந்தியா முழுக்க மோடி பிரச்சாரம் செய்தார். இதன் விளைவாக காங்கிரசிடமிருந்து சர்க்காரை கைப்பற்றினார்.



இந்நிலையில், விஜய் படத்திற்கு “சர்கார்” என பெயர் வைத்து பாஜக பழசை எகிற வைக்க ப்ளான் போட்டது. பாஜக கைராசியை மனதில் வைத்து, அதாவது ஏற்கனவே விஜய்க்கும், பாஜகவுக்கும் இருக்கும் “மெர்சல்” விவகாரத்தில் தமிழக பாஜக லீடர்ஸ் எதிர்ப்பு என்ற பெயரில் இலவச விளம்பரம் செய்து தருமாறு ஹிட்டை வாங்கிக் கொடுத்தனர்.  அதுவும் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா விஜயை மூன்று நான்கு தலைமுறையை நோண்டி நுங்கேடுத்தார். தமிழிசையும் தன் பங்கிற்கு தம் கட்டிப் பேசினார். ஆனால் இவர்கள் என்னதான் பேசினாலும் மெர்சல் டீம் கண்டுக்கவே இல்லை, மாறாக விஜயின் சினிமா வரலாற்றில் வசூலில் பின்னிப் பெடலேடுத்தது.

இந்நிலையில் கடந்த படமான பெர்சல் சர்ச்சையை மனதில் வைத்து, விஜயின் அடுத்தபடத்திற்கு மோடியின் பேமஸ் டயலாக் ஆன "ஆப் கி பார் மோடி சர்கார்" அதிலிருந்து ஒரு வார்த்தையை உருவி சர்கார் என பெயர் சூட்டப்பட்டுள்ளதால், இந்த படம் கண்டிப்பாக பாஜகவிற்கும், மத்திய அரசுக்கும் டெண்ஷனாக்கும் இதனால் நம்ம படத்திற்கு தமிழக பாஜக மூல இலவச விளம்பரம் கிடைக்கும் என ப்ளான் போட்டதாம்.

இதனையடுத்து, சர்க்கார் பட பஸ்ட் லுக் போஸ்டரை எதிர்த்த அதே நேரத்தில் நாம் எதிர்த்தால் படத்திற்கு இலவச விளம்பரம் தேடித்தருவதாக அமைந்துவிடும் என எண்ணிய தமிழக பாஜக எந்த காரணத்தைக்கொண்டும் சர்க்கார் படத்துக்கு எதிராக குரல் கொடுக்க கூடாது என தெளிவாக இருக்கிறதாம்.   

PREV
click me!

Recommended Stories

திமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் காணாமல் போய்விடுவார்கள்..! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கொக்கரிப்பு
திமுகவை நத்தி பிழைப்பதற்காக.. நாயும் பிழைக்கும் இந்த பிழைப்பு..! குருவுக்கு எதிராக அக்னியை கக்கும் நாஞ்சில்