ஆர்,கே.நகர் தொகுதி தோல்விக்கு காரணமான மாவட்ட செயலாளர்களை தூக்கி எறிய வேண்டும் !!  கழகத்திற்குள் ஏற்பட்டுள்ள கலகம் !!

First Published Jan 9, 2018, 10:57 AM IST
Highlights
R.K.Nagar failure dist secretaries are resposible


ஆர்,கே.நகர் தொகுதி தோல்விக்கு காரணமான மாவட்ட செயலாளர்களை தூக்கி எறிய வேண்டும் !!  கழகத்திற்குள் ஏற்பட்டுள்ள கலகம் !!

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் குனிந்து கொண்டே போய்க் கொண்டிருந்தால் கட்சியை வழிநடத்தக்கூடிய தகுதி வாய்ந்தவர்கள் தெரியாமல் போவார்கள் என்றும், ஆர்.கே.நகர் தொகுதி  தோல்விக்கு  காரணமான மாவட்டச் செயலாளர்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும் எனவும் அக்கட்சியின் முதன்மைச் செயலாளர்  துரை முருகன் தெரிவித்துள்ளார்.

சென்னை, அண்ணா அறிவாலயத்தில் நடந்த தி.மு.க., மாவட்ட செயலர்கள் கூட்டத்தில், ஆர்.கே.நகரில் கட்சி தோல்வி அடைந்ததற்கான காரணங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த படுதோல்விக்கு முக்கிய காரண கர்த்தாக்களாக வட சென்னை மாவட்டச் செயலாளர்களான சேகர் பாபுவையும், சுதர்சனத்தையுமே அனைவரும் சுட்டிக்காட்டுகிறார்கள்.

அதே நேரத்தில் கட்சித் தோல்விக்கான காரணங்கள் குறித்து, மாவட்டச் செயலர்கள் பலரும், கட்சித் தலைமை மீதும்  விமர்சனங்களை வைத்து பேசினர். இதையெல்லாம் கேட்டுக் கொண்ட ஸ்டாலின் பதில் எதுவும் சொல்லாமல் அமைதியாகவே அமர்ந்திருந்தார்.

ஸ்டாலினின் அமைதி பலரையும் அதிருப்தி அடையச் செய்தாலும், திமுக முதன்மைச் செயலாளர் துரை முருகன்தான் பூனைக்கு மணி கட்டினார்.  அவர் பேசும்போது , ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பணியில் பிரதானமாக ஈடுபடுத்தப்பட்ட வட சென்னை மாவட்ட செயலர்கள் சேகர் பாபுவும், சுதர்சனமும் தொகுதியில் தீவிரமாக பணியாற்றவில்லை என்று, கட்சியின் பல்வேறு மட்டங்களில் இருந்து தகவல் வருவதாக உடைத்துச் சொன்னார்.

இது குறித்து விசாரணை செய்து அந்த இருவரையும்  பொறுப்புகளில் இருந்து விடுவித்துவிட வேண்டும். அப்படி அதிரடியாக நடவடிக்கை எடுத்தால் தான், மற்றவர்கள் கட்சித் தலைமைக்கு பயந்து செயல்படுவர். அதனால், அவர்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டியது, உங்கள் கடமை தெரிவித்தார்.

அப்போதும் அமைதியாக இருந்த ஸ்டாலின்  அவர்களை மாவட்டப் பொறுப்பில் இருந்து எடுத்து விட்டால், அந்தப் பொறுப்பிற்கு யாரை நியமித்து, கட்சிப் பணியாற்றுவது?' என கேள்வி எழுப்பியுள்ளார்.

இதனை சற்றம் எதிர்பார்க்காத துரை முருகன், தொண்டர்களிடம் பேசும்போது , குனிந்து கொண்டே போய், வேறு ஆட்கள் யாருமே தெரியவில்லை என்றால், எப்படி தெரியும் ? . நிமிர்ந்து சென்றால் தான், எதிரில் இருப்பவரை கவனிக்க முடியும். ஆயிரம் தகுதி வாய்ந்த கட்சிக்காரர்கள், கட்சியை வழி நடத்த இருக்கும்போது, ஆளே கிடைக்கவில்லை என்று சொல்லாமா ? என சொல்லி புலம்பியுள்ளார். சீனியர் துரை முருகன் .

click me!