
ஆர்கே நகர் இடை தேர்தல் வரும் 12ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்றுடன் முடிவடைந்தது.
கடைசி நாளான நேற்று அதிமுக ஓ.பி.எஸ். அணி வேட்பாளர் மதுசூதனன், சசிகலா அணியில் டி.டி.வி.தினகன், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, பாஜக சார்பில் இசையமைப்பாளர் கங்கை அமரன் உள்பட ஏராளமானோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
இதில், அரசியல்கள் கட்சிகள் உள்பட 127 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இன்று வேட்பு மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்து கொள்ளப்படுகிறது.
முன்னதாக வேட்பாளர்கள் தங்களது சொத்து மதிப்பு குறித்த அறிக்கையை தேர்தல் அதிகாரியிடம் கொடுத்துள்ளனர். அதில், 4 பேரது சொத்து மதிப்பு பட்டியல் மட்டும் தற்போது, வெளியிடப்பட்டுள்ளது.
திமுக வேட்பாளர் மருதுகணேஷ் : அசையும் சொத்து ரூ.2,79,531. மனைவி பெயரில ரூ-7,08,606 உள்ளது.
அதிமுக ஓபிஎஸ் வேட்பாளர் மதுசூதனன் : அசையும் சொத்து ரூ.1.37 கோடி. மனைவி பெயரில் ரூ.3.30 கோடி.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் லோகநாதன் : ரூ.6.05 லட்சம்.
அதிமுக சசிகலா வேட்பாளர் டி.டி.வி.தினகரன் : அசையும் சொத்து ரூ.11,45,781, அசையா சொத்து 57.44 லட்சம், மனைவி பெயரி ரூ.10 கோடி, இதில் அசையும் சொத்து ரூ.7 கோடியே 18 லட்சத்து 66 ஆயிரத்து 55, அசையா சொத்து ரூ.2 கோடி 40 லட்சத்து 71 ஆயிரம் 687.
எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை வேட்பாளர் தீபா சொத்து மதிப்பு அசையும் சொத்து - ரூ.1.05 கோடி, அசையா சொத்து - ரூ.2 கோடி...