நீங்க தொடர்ந்து ஊக்குவிச்சா தமிழகத்தில் மதக்கலவரம் உருவாகிடும்... வேலூர் இப்ராஹீம் எச்சரிக்கை..!

By Asianet TamilFirst Published Oct 2, 2021, 9:05 AM IST
Highlights

இந்து மத நம்பிக்கைகள் இழிவுபடுத்துவதையும், வழிபாட்டு முறைகள் கேலி செய்யப்படுவதையும் இஸ்லாமியர்களாகிய நாங்கள் எதிர்க்கிறோம் என்று பாஜக சிறுபான்மை அணி தேசிய செயலாளர் வேலூர் சையத் இப்ராஹீம் தெரிவித்துள்ளார். 
 

மயிலாடுதுறையில் வேலூர் சையத் இப்ராஹீம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “தமிழகத்தில் திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் திட்டமிட்டு பாஜகவை மதவாத கட்சி என்றும், இஸ்லாமியர்களுக்கு எதிரான கட்சி என்றும் பொய்ப் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். இது, இந்து -  இஸ்லாமிய மக்கள் இடையே நல்லிணக்கத்தை கெடுக்கும் வகையில் உள்ளது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த 5 மாதங்களில் மத்திய அரசுக்கு எதிராகப் பிரிவினைவாத, பயங்கரவாத சக்திகள் ஊக்கம் பெற்றுள்ளன.
அவர்களுடைய பேச்சு மத்திய அரசை இழிவுப்படுத்தும் வகையிலும் வன்முறையைத் தூண்டும் வகையிலும் உள்ளது. தமிழக முதல்வர் இதுபோன்ற நடவடிக்கைகளை தொடர்ந்து ஊக்குவித்தால் அமைதிப் பூங்காவான தமிழகத்தில் மதக் கலவரத்தை உருவாக்கிவிடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்து மத நம்பிக்கைகள் இழிவுபடுத்துவதையும், வழிபாட்டு முறைகள் கேலி செய்யப்படுவதையும் இஸ்லாமியர்களாகிய நாங்கள் எதிர்க்கிறோம். இந்து மதத்தை இழிவுப்படுத்துபவர்கள் மீது தமிழக அரசு கடுமையான நடவடிக்கைளை எடுக்க வேண்டும்.


சட்டப்பேரவைத் தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் மாதந்தோறும் மத்திய அரசுக்கு எதிரான கருத்துக்களை திமுக கூறி வருகிறது. இதன் மூலம மக்களை திசைதிருப்பும் முயற்சியை திமுக செய்கிறது. உள்ளாட்சித் தேர்தலில் தலைவர்கள் பிரச்சாரம் செய்யும்போது காவல்துறையை வைத்து நெருக்கடி கொடுப்பது போன்ற எந்த அச்சுறுத்தலுக்கும் நாங்கள் அஞ்சமாட்டோம்” என்று இப்ராஹீம் தெரிவித்தார்.
 

click me!