சாலை விபத்தில் உயிரிழந்த 4 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம்.. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!

By vinoth kumar  |  First Published Jan 20, 2024, 2:42 PM IST

சாலை விபத்தில் உயிரிழந்த 4 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 


தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்த 4 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்;- தூத்துக்குடி மாவட்டம், மூணாவயல் கிராமத்திலிருந்து நான்கு சக்கர வாகனத்தில் வேளாங்கண்ணிக்கு குடும்ப நிகழ்ச்சிக்காக செல்லும் வழியில் தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், சேதுபாவாசத்திரம், மனோரா அருகில் இன்று அதிகாலையில் எதிர்பாராதவிதமாக நிகழ்ந்த விபத்தில் பாக்கியராஜ் (62) த/பெ.யாகப்பதேவர், ஞானம்மாள் (60) க/பெ.அந்தோணி, ராணி (40) க/பெ. மாசாணம் மற்றும் சின்னபாண்டி (40), த/பெ. முருதையா ஆகிய நால்வரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

Tap to resize

Latest Videos

undefined

இதையும் படிங்க;- அதிகாலையில் நடந்த கோர விபத்து.. துடிதுடித்து உயிரிழந்த 4 பேர்.. நடந்தது என்ன?

மேலும், இவ்விபத்தில் பலத்த காயமடைந்து தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு சிறப்புச் சிகிச்சை அளிக்கவும் அறிவுறுத்தியுள்ளேன். இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா இரண்டு இலட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாயும், இலேசான காயமடைந்தவர்களுக்கு தலா இருபத்தைந்தாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.

இதையும் படிங்க;-  நாளை பிரம்மாண்டமாக நடைபெற உள்ள திமுக இளைஞர் அணி மாநாடு.. இன்று சேலம் வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின்.!

click me!