
சசிகலா அணிக்கு எதிராக தங்களது எழுச்சியை காண்பிக்கும் விதத்தில் தமிழகம் முழுவதும் ஓ.பி.எஸ்சும் தீபாவும், சுற்றுபயணம் கிளம்புகின்றனர். அதற்கான வாகனம் தயார்நிலையில் உள்ளது.
1988 ல் ஜானகி ஜெயலலிதா என அணிகளாக பிரிந்த அதிமுக ஜெயலலிதா வசம் நிரந்தரமாக தங்கியது.
மறுபுறம் ஓ.பி.எஸ், தீபா இருவருக்கும் மக்கள் ஆதரவு இருப்பதை, அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் தொகுதிக்கு செல்லும்போது மக்கள் அளிக்கும் வரவேற்பை வைத்து தெரிந்து கொள்ள முடிகிறது.
இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வம் ஏற்கனவே அறிவித்ததுபோல் மக்களை தேடி பிரச்சார பயணம் மேற்கொள்வதில் இறங்கிவிட்டார்.
இதற்கு முன்னோட்டமாக பிப்.24 அன்று ஜெயலலிதா தேர்தலில் நின்று வெற்றி பெற்ற ஆர்.கே.நகர் தொகுதியில் ஓ.பி.எஸ் ஜெ.தீபா பங்கேற்கும் மாபெரும் பிரமாண்ட விழா நடைபெற உள்ளது.
இதில் இருவரும் கலந்து கொண்டு மக்கள் நலத்திட்டங்களை வழங்குகின்றனர். பின்னர், பிரச்சார பயணத்தை துவக்க உள்ளனர். இதற்கான வாகனங்கள் தயார்நிலையில் உள்ளது. அதனை கழக உடன் பிறப்புகளுடன் ஓ.பி.எஸ் இன்று பார்வையிட்டார்.
சிங்கம் ஒன்று புறப்பட்டதே..... அப்டின்னு பாட்டு பாட தோணும். ஆனால் பாட முடியாது, பாடவும் கூடாது. காரணம், அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா தன்னை சிங்கம் சிங்கம் என்று கூவியபோது, ஓ.பி.எஸ் மனிதனை பார்த்து யாரவது சிங்கம் என்று கூவுவார்களா? என வடிவேலு காமெடியை சொல்லி கிண்டல் அடித்தார். அதனால் கொஞ்சம் அடக்கி வாசிப்போம்....