முதல்வர் தாயார் திருவுருவ படத்திற்கு அஞ்சலி செலுத்திய மத்திய அமைச்சருக்கு கொரோனா... அதிர்ச்சியில் எடப்பாடி..!

By vinoth kumarFirst Published Oct 27, 2020, 3:17 PM IST
Highlights

மத்திய அமைச்சரும் இந்திய குடியரசு கட்சியின்  தலைவருமான ராம்தாஸ் அத்வாலேவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மத்திய அமைச்சரும் இந்திய குடியரசு கட்சியின்  தலைவருமான ராம்தாஸ் அத்வாலேவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த உலக நாடுகள் அனைத்தும் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. கொரோனா வைரஸ் தொற்று பொது மக்கள் மட்டுமின்றி மருத்துவர்கள், முதன்மை பணியாளர்கள் அரசியல் தலைவர்கள் உட்பட அனைவரையும் பாரபட்சமின்றி தாக்கி வருகிறது. ஏற்கனவே இந்த வைரஸ் தொற்றுக்கு மத்திய அமைச்சர்கள் உட்பட பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலேவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாகவே சளி தொந்தரவு இருந்ததையடுத்து கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, அவர் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அண்மையில் உடல்நலக் குறைவால் உயிரிழந்த முதலமைச்சர் பழனிசாமியின் தாயார் திருமதி. தவுசாயம்மாள் அவர்களின் திருவுருவப் படத்திற்கு கடந்த 24ம் தேதி சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள  முகாம் அலுவலகத்திற்கு மத்திய இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே நேரில் வந்து, மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் முதலமைச்சர் பழனிசாமிக்கு மத்திய இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே ஆறுதல் தெரிவித்தார். நேற்று நடிகை பாயல் கோஷ், ராம்தாஸ் அத்வாலே முன்னிலையில் இந்திய குடியரசு கட்சியில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!