சந்தி சிரிக்கும் டி.என்.பி.எஸ்.சி ஊழல்!! விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் - ராமதாஸ்

 
Published : Jun 28, 2017, 03:17 PM ISTUpdated : Sep 19, 2018, 12:49 AM IST
சந்தி சிரிக்கும் டி.என்.பி.எஸ்.சி ஊழல்!!  விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் - ராமதாஸ்

சுருக்கம்

ramadoss statement about tnpsc

டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 தேர்வில் விடைத்தாள்களை மாற்ற 1 கோடி ரூபாய், கூடுதல் மார்க் போட 15 லட்சம் ரூபாய் என டி.என்.பி.எஸ்.சி ஊழல் சந்தி சிரிக்கிறது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள  அறிக்கையில்,
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 1 பணிகளுக்கான முதன்மைத் தேர்வுகளின் விடைத்தாள்களை மதிப்பீடு செய்வதில் பெருமளவில் முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளார்.

கடந்த 2015 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு 2016 ஆம் ஆண்டு ஜூலை 29, 30 ஆகிய தேதிகளில் முதன்மைத் தேர்வுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தியது. அப்போது டி.என்.பி.எஸ்.சி தலைவராக ஓய்வுபெற்ற இ.ஆ.ப. அதிகாரி முனைவர் அருள்மொழி பணியில் இருந்ததால் அந்தத் தேர்வுகளில் முறைகேடுகள் நடக்காமல் தடுக்கப்பட்டது.

ஆனால் திடீரென தேர்வாணையத்தின் தலைவர் அருள்மொழி இரு மாத விடுப்பில் சென்றுவிட்டார். அவர் தானாக சென்றாரா? அல்லது விடுப்பில் செல்லும்படி கட்டாயப்படுத்தப்பட்டாரா? என்பது தெரியவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
அவர் விடுப்பில் சென்ற ஒரு வாரத்தில், முதல் தொகுதி பணிகளுக்கான முதன்மைத் தேர்வு முடிவுகள் அவசர அவசரமாக வெளியிடப்பட்டு முதன்மைத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற 148 பேர் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டனர்.

ஆனால்  148 பேரில் பெரும்பான்மையானோர் தகுதி இல்லாதவர்கள் என்றும், முதன்மைத் தேர்வு முடிவுகளில் ஊழல்கள் நடந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியானதாக ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

டி.என்.பி.எஸ்.சி உறுப்பினர்களாக உள்ள சிலரும், போட்டித்தேர்வு பயிற்சி மையம் நடத்தும் சிலரும் கூட்டணி அமைத்துக் கொண்டு  இந்த முறைகேட்டை செய்துள்ளனர் என்றும், இதற்காக சிலரிடமிருந்து ரூ. 1 கோடி வரை கையூட்டு பெறப்பட்டிருப்பதாக குற்றச்சாற்று எழுந்துள்ளது.

நேர்காணலில் கூடுதல் மதிப்பெண் வழங்குவதற்கான பேரங்களும் நடைபெற்று வருவதாகவும், இதற்கு ரூ.10 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியானதாக ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

தேர்வாணையத் தலைவர் அருள்மொழி முக்கியமான காலக் கட்டத்தில் இரு மாத விடுப்பில் சென்றது ஏன்? அருள்மொழி விடுப்பில் சென்ற  ஒரு வாரத்தில் வெளியிடப்பட்ட முடிவுகளை, அவர் பணியில் இருந்தபோதே வெளியிட்டிருக்க முடியாதா? முடிவுகள் வெளியிடப்படுவதற்கு முன்பாக அருள்மொழியிடம் ஒப்புதல் பெறப்பட்டதா? என்பன உள்ளிட்ட வினாக்களுக்கு விடை காணப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ள டாக்டர் ராமதாஸ்,. இந்த முறைகேடுகள் குறித்து  விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

41 பேரை கொன்று குவித்த நடிகர் விஜய் பின்னால் செல்வது ஏன்..? கிறிஸ்தவ மத முதல்வர் காட்வின் எதிர்ப்பு.. தவெக அதிர்ச்சி..!
எச்சில் கறியை உண்ட சிவபெருமான் இந்து இல்லையா..? எம்.பி., சு.வெங்கடேசன் சர்ச்சை பேச்சு..!