கம்னாட்டி பசங்களா!! சண்டாளர்களே.!! தோல்வி எரிச்சலில் கழுவி கழுவி ஊத்திய ராமதாஸ்...

By sathish kFirst Published Jun 23, 2019, 1:14 PM IST
Highlights

ஏண்டா நாய்களா, கம்னாட்டி பசங்களா பத்திரிகையாளர்களைத் தரம் தாழ்ந்து டாக்டர் ராமதாஸ் விமர்சித்துள்ளார்.

தேர்தலுக்கு முன்பாக அதிமுகவை  ராமதாஸும், அன்புமணியின் நாளுக்கு நாள் புள்ளிவிவரங்களோடு அறிக்கை விட்டது, டயர்நக்கி என்று ஓபிஎஸ்,இபிஎஸ்யை கேவலமாக பேசியது, இப்படியெல்லாம் கழுவி கழுவி ஊத்திய பிறகு அதிமுகவோடு கூட்டணி வைத்தபிறகு செய்தியாளர்களைச் சந்தித்து அதுகுறித்து விளக்கமளித்த அன்புமணி, பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாமல் திணறியது. ஒருகட்டத்தில் கேள்வி கேட்கும் நிருபரைப் பார்த்துக் கோபமாகப் பேசிவிட்டு எஸ்கேப் ஆனது என மிகப்பெரிய சம்பவம் நடந்தது.  

இந்த நிலையில் பாமகவின் ஒரு பிரிவான தமிழ்ப் படைப்பாளிகள் பேரியக்கத்தின் சார்பில் ‘வளர்க்கப்படுகின்ற வெறுப்பு அரசியல்’ என்ற தலைப்பில் கருத்தரங்குக்கு நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  இதுதொடர்பாக பாமக நிர்வாகிகள் சிலரைத் தொடர்புகொண்டு பேசியபோது, “ஊடகங்கள் எங்கள் மீது காட்டும் காழ்ப்புணர்வுக்குப் பதிலடி கொடுக்கவும், சமூகரீதியாக எங்கள் மீது வைக்கப்படும் விமர்சனங்களுக்கும் பதிலளிக்கவே இந்தக் கூட்டம் என்று தெரிவித்தனர். 

கூட்டத்தில் இறுதியாக பேசிய ராமதாஸ், “டெலகிராப் என்று கொல்கத்தாவிலிருந்து வரும் ஒரு பத்திரிகை. அதன் நிருபர் இங்கு இருக்கிறான். அவன் என்னிடம் ‘சார், மரத்தை வெட்டிவிட்டீர்களாமே’ என்று கேட்கிறான். அப்போது நான், தம்பி இந்த கேள்விக்கு நான் 100 தடவை பதில் சொல்லிவிட்டேன். திரும்பவும் நீ கேட்கிறாய் என்றால், ராமதாஸ் என்பவன் மரத்தை வெட்டுபவன் என்று மக்களுக்குப் பதிய வைக்க வேண்டும் என்பதற்காகத்தான் கேட்கிறாய். இனிமேல் ஏதாவது போராட்டம் என்றால் மரத்தையெல்லாம் வெட்ட மாட்டோம். இதேபோல கேள்வி கேட்கும் ஆளை வெட்டிக்கொன்று விட்டு போராட்டம் செய்கிறோம் என்றேன்.

உடனே அனைவரும் எழுந்து என்ன இப்படிச் சொல்கிறீர்கள் என்று கேட்டனர். 100 தடவை இதனை கேட்டுவிட்டீர்கள் என்றேன். 101வது தடவை கேட்டால் பதில் சொல்ல வேண்டியதுதானே என்று ஒருவன்  சொல்றான். அப்படியென்றால் ராமதாஸ் என்றால் மரம்வெட்டி என நிரூபிக்க அவர்கள் முயல்கிறார்கள் என்று கடுமையாகப் பேசினார்.

கடைசியாக பத்திரிகையாளர்களைத் தரம் தாழ்ந்து விமர்சித்த அவர்; ஏண்டா நாய்களா, கம்னாட்டி பசங்களா, இது கிராமத்து பாஷை. நான் வைத்த மரத்தை வந்துபாருங்கள் ஒரு வருடமாகிறது இதுவரை எந்த நாயும் வந்து பார்க்கவில்லை. அறக்கட்டளை மூலமாக வனமே வைத்துள்ளேன் என் அசிங்க அசிங்கமாக பேசினார்.

click me!