சில கார்ப்ரேட் நிறுவனங்களின் ஆதிக்க மனப்பான்மை இனி செல்லாது !! தெறிக்க விட்ட ராஜீவ் சந்திரசேகர் !!

By Selvanayagam PFirst Published Dec 2, 2019, 2:01 PM IST
Highlights

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் சில கார்ப்ரேட் நிறுவனங்கள் அரசு மீது ஆதிக்கம் செலுத்தியதைப் போன்று  பிரதமர் மோடியின்  ஆட்சியில் அவை ஆதிக்கம் செலுத்த  முடியாது என்று பாஜக மாநிலங்களவை உறுப்பினர் ராஜீவ் சந்திரசேகர் அதிரடியாக தெரிவித்துள்ளார்.
 

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, நிதியமைச்சா் நிர்மலா சீதாராமன், ரயில்வே துறை அமைச்சா் பியூஷ் கோயல்  ஆகியோர் பங்கேற்றிருந்தனா். 

அதில் கலந்துகொண்டு பேசிய தொழிலதிபர் ராகுல் பஜாஜ், ‘மத்திய அரசை விமா்சிக்கும் விவகாரத்தில் நாட்டு மக்களிடையே அச்ச உணா்வு நிலவுகிறது. விமா்சனங்களை அரசு ஏற்றுக்கொள்ளும் என்ற நம்பிக்கை மக்களிடையே இல்லை’ என்று கூறி அதிர வைத்தார். தொடர்ந்து பேசிய அவர், கார்ப்பரேட் நிறுவனங்கள் கூட தங்களது கருத்துக்களை கூற முடியாமல் அச்சத்தில் உள்ளதாக கடுமையாக குற்றம் சாட்டினார்.

ஆனால் ராகுல் பஜாஜ் கருத்துக்கு மறுப்பு தெரிவித்து பேசிய அமித் ஷா, ‘மக்கள் எதற்கும் அச்சப்படத் தேவையில்லை. நரேந்திர மோடி தலைமையிலான அரசு அன்றாடம் ஊடகங்களில் விமா்சிக்கப்படுகிறது. ஒருவேளை மக்களிடையே அச்ச உணா்வு இருப்பதாக நீங்கள் கூறினால், அந்தச் சூழ்நிலை சரிசெய்யப்படும்’ என்றார். மேலும் கார்ப்பரேட் நிறுவனங்கள் நியாயமாக செயல்பட்டால் அச்சப்படத் தேவையில்லை என்றும் கூறினார்..

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக மாநிலங்களவை உறுப்பினர் ராஜீவ் சந்திரசேகர், சில கார்ப்பரேட்  நிறுவனங்கள் பாதுகாப்பின்மையை உணர்வதாக தெரிவித்துள்ளன. அதற்கு காரணம் என்ன தெரியுமா ? 

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் கார்ப்ரேட் நிறுவனங்கள் அரசு மீது ஆதிக்கம் செலுத்தியதைப் போன்று  பிரதமர் மோடியின்  ஆட்சியில் அவை ஆதிக்கம் செலுத்த  முடியாது. அவர்கள் தங்கள் செல்வாக்கை பாஜக ஆட்சியில் திணிக்க முடியாது என்றும் அதிரடியாக தெரிவித்துள்ளார்.
 

click me!