ரஜினி எடுத்த அதிரடி முடிவு... கலக்கத்தில் அதிமுக, திமுக... இன்று முக்கிய அறிவிப்பு..!!

By Ezhilarasan BabuFirst Published Nov 30, 2020, 10:52 AM IST
Highlights

இந்நிலையில் திடீர் திருப்பமாக சென்னை வரும்படி ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களுக்கு ரஜினிகாந்து அழைப்பு விடுத்தார். இன்று காலை 10 மணிக்கு கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ரஜினி தலைமையில் மக்கள் மன்ற ஆலோசனை தொடங்கியது, 

கட்சி தொடங்குவது எப்போது என்பது குறித்து மாவட்ட செயலாளர்களுடன் நடிகர் ரஜினிகாந்த் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். ஒட்டுமொத்த  ரஜினி ரசிகர்களும் அவர் எப்போது அரசியல் கட்சி தொடங்கப் போகிறார் என்று எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அரசியலுக்கு வரப் போவதாக அறிவித்த ரஜினிகாந்த் சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையிலும் அது குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடாமல் இருந்தது ரசிகர்கள் மத்தியில்  கவலையை அதிகரிக்க செய்தது. 

அதேபோல் நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரமாட்டார் என்ற தகவலும்  வெளியானது ரசிகர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதாவது கடந்த அக்டோபர் 29ஆம் தேதி ரஜினிகாந்த் பெயரில் வெளியான அறிக்கை ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. அதாவது ரஜினி அரசியலுக்கு வருவது சந்தேகம்தான் என்ற கருத்து பரவியது. அது குறித்து தெரிவித்து நடிகர் ரஜினிகாந்த் தனது உடல்நிலை மற்றும் டாக்டர்கள் அறிவித்த அறிகுறிகள் தொடர்பாக அந்த அறிக்கையில் உள்ள தகவல்கள் உண்மை தான் என்றார். அதே போல் அரசியல் கட்சி குறித்து தகுந்த நேரத்தில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்து தெரிவிப்பதாகக் கூறினார். ரஜினிகாந்த் அரசியல் கட்சி  தொடங்குவாரா?  வரமாட்டாரா என்ற பெருத்த சந்தேகம் இருந்து வந்தது. 

இந்நிலையில் திடீர் திருப்பமாக சென்னை வரும்படி ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களுக்கு ரஜினிகாந்து அழைப்பு விடுத்தார். இன்று காலை 10 மணிக்கு கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ரஜினி தலைமையில் மக்கள் மன்ற ஆலோசனை தொடங்கியது, ரஜினி மக்கள் மன்ற 38 மாவட்ட செயலாளர்களும் அதில் கலந்து கொண்டனர். பெரும்பாலான நிர்வாகிகள் காலை 9 மணிக்கே மண்டபத்திற்கு வந்தனர். தற்போது அரசியல் கட்சி தொடங்கும் சூழல் உள்ளதா.?  இல்லையா என்பது குறித்து நிர்வாகிகளிடம் ரஜினி கேட்டு வருகிறார். அதேபோல நிர்வாகிகளும் தங்கள் பகுதியின் நிலவரம் குறித்தும், தங்களது கருத்துக்களையும் ரஜினியுடன் பகிர்ந்து வருகின்றனர்.

ஒருவேளை கட்சி தொடங்கினால் சட்டமன்ற தேர்தலை எப்படி எதிர்கொள்வது, பிரச்சாரப் பணிகளை எவ்வாறு மேற்கொள்வது என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின்னர் ரஜினி தனது அரசியல் முடிவை அறிவிப்பார் என தகவல் உள்ளது. ரஜினி அரசியலுக்கு வரப்போவதில்லை, எனவே இந்த தேர்தலிலும் அதிமுக-திமுகவுக்கும் இடையேதான் போட்டி என்று எண்ணிக் கொண்டிருந்தவர்களுக்கு ரஜினியின் நடவடிக்கை எதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 

click me!