ரூட்டை மாற்றி ஸ்ரைட்டாக அடித்த ரஜினிகாந்த்... வெற்றிடம் குறித்து ஓபன் டாக்...!

By Kanimozhi PannerselvamFirst Published Mar 12, 2020, 11:59 AM IST
Highlights

ஆனால் இன்று தான் கூறிய வெற்றிடத்திற்கான அர்த்தம் குறித்து ரஜினிகாந்த் கூறிய பதில் இப்படி ஒரு மாஸ்டர் பிளானா என ஆடிப்போக வைத்துள்ளது. 

நடிகர் ரஜினிகாந்த் இன்று காலை சென்னையில் உள்ள லீலா பேலஸ் நட்சத்திர ஓட்டலில் செய்தியாளர்களை சந்தித்தார். பல வருடங்களுக்குப் பிறகு தனது அரசியல் நிலைப்பாடு குறித்து படு ஓபனாக பேசியுள்ளார். எப்போது கட்சி தொடங்க போகிறார் என்று நேரடியாக கூறாவிட்டாலும், தனது அரசியல் பிரவேசத்திற்கு முன்பே மக்களுக்கு தனது கொள்கைகள் மற்றும் கட்சி சார்ந்த முடிவுகள் குறித்து தெளிவாக விளக்கினார். 

இதையும் படிங்க: “வீடு, வீடாக போய் கூப்பிடுவேன்”... சிஸ்டத்தை சரி செய்ய ரஜினி போட்ட ஸ்கெட்ச்...!

அரசியல் குறித்து ரஜினியிடம் எப்போது கேள்வி எழுப்பபட்டாலும், அவர் கூறும் பதிலில் முதலிடம் பிடிப்பது தமிழகத்தில் சரியான ஆளுமையான தலைக்கு வெற்றிடம் உள்ளது என்பதும், சிஸ்டர் கெட்டுப்போச்சு, சுத்தமா சிஸ்டம் சரியில்லை என்பதும் தான். இதை வைத்து நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு கிண்டல் செய்துள்ளனர். ஆனால் இன்று தான் கூறிய வெற்றிடத்திற்கான அர்த்தம் குறித்து ரஜினிகாந்த் கூறிய பதில் இப்படி ஒரு மாஸ்டர் பிளானா என ஆடிப்போக வைத்துள்ளது. 

இதையும் படிங்க: தமிழகம் தலைநிமிர மக்கள் இதை செய்தே ஆகவேண்டும்... 2021ல் மாபெரும் அரசியல் புரட்சிக்கு அடிப்போட்ட ரஜினி..!

இன்று லீலா பேலஸில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தமிழகத்தில் மிகப்பெரிய வெற்றிடம் உள்ளது. இரண்டு ஜாம்பவான்கள் இப்போது இல்லை. திமுகவிற்கு ஓட்டு போட்டவர்கள் 30 சதவீதம் கட்சிக்காகவும், 70 சதவீதம் கலைஞருக்காகவும் ஓட்டு போட்டார்கள். அதிமுகவில் 30 சதவீத ஓட்டு கட்சிக்காகவும், 70 சதவீத ஓட்டு ஜெயலலிதா அம்மாவுக்காகவும் போட்டார்கள். அந்த இரண்டு ஆளுமையும் இப்போது இல்லை. இது தான் வெற்றிடம். இது தான் நேரம். 54 ஆண்டுகளாக ஆட்சி செய்து வரும் கட்சிகளை அகற்றுவதற்கு என்று கூறினார். 
 

click me!