ரஜினி அதுக்கு சரிப்பட்டு வரமாட்டார்: தானா போயி தகராறு இழுக்கும் பீட்டரு!

By manimegalai aFirst Published Nov 23, 2018, 4:55 PM IST
Highlights

அரசியலுக்குள் அடியெடுத்து வைக்கப்போகும் ரஜினி, கஜா புயல் சேதங்களை நேரில் பார்த்து, மக்களுக்கு ஆறுதல் தர நேரில் வருவார்! என்று எதிர்பார்த்து ஏமாந்ததாக டெல்டா பகுதி ரசிகர்கள் வருந்தியுள்ளனர்.

அரசியலுக்குள் அடியெடுத்து வைக்கப்போகும் ரஜினி, கஜா புயல் சேதங்களை நேரில் பார்த்து, மக்களுக்கு ஆறுதல் தர நேரில் வருவார்! என்று எதிர்பார்த்து ஏமாந்ததாக டெல்டா பகுதி ரசிகர்கள் வருந்தியுள்ளனர். மக்கள் தங்களிடம் இதை கேட்பதாகவும் நொந்துள்ளனர். 
(இந்த விஷயம் மட்டும் தலைவருக்கு தெரிஞ்சா ‘நான் இப்போதான் வீட்டைவிட்டு வெளில வர்றேன்! என்னா கஜா? என்னா சேதம்? புரியலையே!’ அப்படின்னு ஒரு குண்டை வீசாம இருந்தா சரி.)

*எம்.எல்.ஏ. பதவி போயிடுச்சேங்கிற வருத்தம் எங்க 18 பேருக்கும் இப்பவும் இருக்குது. இதை நான் வெளிப்படையாகவே ஒத்துக்குறேன்! என்று புலம்பியுள்ளார் தினகரன் அணியை சேர்ந்த தங்கதமிழ் செல்வன். 

(எம்.எல்.ஏ. பதவி பறிபோனதுக்கே இந்த புலம்பு புலம்புறீங்களே? எடப்பாடியார்ட்ட இருந்து சி.எம். பதவியையே பறிக்க ஆசைப்படுறீங்களே! இது நியாயமா! எம்பூட்டு வலிக்கும் அந்த மனுஷனுக்கு?)

* என் கேரியரையே கொச்சைப்படுத்தும் செயலை செய்துள்ளனர். இந்த சதியையும் எதிர்த்து நிற்கும் சக்தி எனக்கு உண்டு. வழக்கறிஞர்களுடன் பேசிக்கொண்டிருக்கிறேன், அவர்களது ஆலோசனைக்கு பிறகு மீடியாவை சந்திப்பேன்!: என்று ரகசிய வீடியோ பதிவில் சிக்கியிருக்கும் ஸ்டெர்லைட் போராளி பாத்திமா பாபு கூறியுள்ளார். 

(நல்ல வேளை மேடம், ‘அது மார்ஃபிங் பண்ணப்பட்டது, கிராஃபிக்ஸ் பண்ணியிருக்காங்க.’ அப்படிங்கிற வழக்கமான சொல்லாடல்கள் வந்து விழலை!ன்னு மீடியா தரப்புல பேசிக்கிறாங்க. 

* தயாரிப்பாளர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் பதவியை நடிகர் உதயா உட்பட எட்டு பேர் உதறியுள்ளதை தொடர்ந்து தள்ளாட துவங்கியுள்ளதாம் தயாரிப்பாளர் சங்கம். 
(விஷால் இப்போ செம்ம ஹாப்பி ஆகியிருப்பாரோ, ‘மறுபடியும் சங்கத்தை கட்டியமைச்ச பிறகுதான் என் கல்யாணம்!’ அப்படின்னு ஒரு சீன் அறிக்கை வந்தாலும் ஆச்சரியமில்லை. பயபுள்ள கல்யாணத்தை தள்ளிப்போடுறதுக்கு பின்னாடி என்னதான் காரணமோ?)

* யாரையும் தான் காயப்படுத்தக் கூடாது, யார் பக்கமும் சாய்ந்துவிட்டதாக தோற்றம் வந்துவிட கூடாது! என பயப்படுகிறார் ரஜினி. இது அரசியலுக்கு சரிப்பட்டு வராது: என்று பீட்டர் அல்போன்ஸ் சொல்லியிருக்கிறார். 
(அப்படியாண்ணே!? தூத்துக்குடி போராட்டம் பற்றி தலீவர் சொன்னதை எத்தனை கோடி பேரை காயப்படுத்துச்சுன்னு மறந்துட்டீங்களா? ஓ, மக்களை காயப்படுத்தலாம், ஆனா சக அரசியல் தலைவருங்களை காயப்படுத்த கூடாதுன்னு அவர் நினைக்கிறார்னு சொல்றீங்களோ!)

click me!