’பொறுத்தது போதும்...காட்டுமிராண்டிகளுக்கு பதிலடி கொடுப்போம்’...ரஜினி ஆவேசம்...

Published : Feb 16, 2019, 09:20 AM IST
’பொறுத்தது போதும்...காட்டுமிராண்டிகளுக்கு பதிலடி கொடுப்போம்’...ரஜினி ஆவேசம்...

சுருக்கம்

ஜம்மு காஷ்மீர் புல்வாமா தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள நடிகர் ரஜினிகாந்த்,’ பொறுத்தது போதும். காட்டுமிராண்டித்தனங்களுக்கு கொஞ்சமும் பொறுமை காட்டாமல் உடனுக்குடன் பதிலடி கொடுக்கவேண்டிய நேரம் வந்துவிட்டது’ என்று காட்டமாகக் கூறியுள்ளார்.

காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் துணை ராணுவப்படையினரின் வாகனங்களை குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 40-க்கும் மேற்பட்ட வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது. பயங்கரவாதிகளுக்கு பல்வேறு தரப்பில் இருந்து கண்டனம் குவிந்து வருகிறது.

இதுகுறித்து அரசியல் தலைவர்களும் சினிமா நட்சத்திரங்களும் நாடு முழுவதும் தமது கண்டனங்களைத்தெரிவித்துவரும் நிலையில் ரஜினியும் மிக ஆவேசமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,’ஜம்மு-காஷ்மீர் புல்வாமாவில் பயங்கரவாதிகள் நடத்திய மன்னிக்க முடியாத தாக்குதலை நான் வன்மையாக கண்டிக்கிறேன். போதும்... நடந்தவரை போதும்... இத்தகைய காட்டுமிராண்டித்தனமான செயல்களுக்கு முடிவு கட்ட வேண்டிய நேரம் வந்து விட்டது. பலியான வீரர்களின் குடும்பத்தினருக்காக என் இதயம் கலங்குகிறது. உலகை விட்டுப்பிரிந்த தைரியமான அந்த இதயங்களின் ஆன்மா சாந்தியடையட்டும்’ என்று தெரிவித்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

CM Vijay: விஜய்க்கு சிம்மாசனம் கிடைத்தது எப்படி.?! சினிமாவிலும், அரசியலிலும் வெற்றியை தேடி கொடுத்த சீக்ரெட் இதுதான்.!
Govt Scheme: ரூ.4,000 அரசு மானியம் வேண்டுமா? இந்த ஆவணங்கள் உங்களிடம் இருந்தால் போதும்!