உங்க உளறல்களை எல்லாம் பொறுத்துக் கொள்ள முடியாது! ரஜினியை ரணகளப்படுத்திய ரசிகர்கள்!

By manimegalai aFirst Published Sep 27, 2018, 5:14 PM IST
Highlights

தவளைக்கு மட்டுமல்ல சூப்பர் ஸ்டாருக்கும் வாய்தான் பிரச்னை போல! தன் மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கு தடால்புடாலென அவர் விதித்த கட்டுப்பாடுகளும், மக்கள் மன்ற தலைமை நிர்வாகி இளவரசனின் இம்சை வார்த்தைகளும், மன்ற நிர்வாகிகள ஒட்டுமொத்தமாக  சூப்பர் ஸ்டாரை நோக்கி, சுரீர் கோபத்துடன் திரும்ப வைத்துள்ளன. 

தவளைக்கு மட்டுமல்ல சூப்பர் ஸ்டாருக்கும் வாய்தான் பிரச்னை போல! தன் மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கு தடால்புடாலென அவர் விதித்த கட்டுப்பாடுகளும், மக்கள் மன்ற தலைமை நிர்வாகி இளவரசனின் இம்சை வார்த்தைகளும், மன்ற நிர்வாகிகள ஒட்டுமொத்தமாக  சூப்பர் ஸ்டாரை நோக்கி, சுரீர் கோபத்துடன் திரும்ப வைத்துள்ளன. 

விவகாரம் இதுதான்...அரசியலை நோக்கி பயணிக்க துவங்கிவிட்ட ரஜினி, முதற்கட்டமாக தனது ரசிகர் மன்றத்தை மக்கள் மன்றாமாக பெயர் மாற்றியிருக்கிறார். இதன் நிர்வாகிகளாக, ஏற்கனவே ரசிகர் மன்றத்தின் நிர்வாகத்திலிருந்த நபர்கள்தான் இருந்தனர். இந்நிலையில், இளவரசன் எனும் நபரை, மக்கள் மன்றத்தின் நிர்வாகியாக  நியமித்தார் ரஜினி. இவரது வரவால்  ஏற்கனவே ரஜினி அமைப்பில் கோலோச்சிக் கொண்டிருந்த சுதாகர் மற்றும் மாஜி லைகா நிர்வாகி ராஜூ மகாலிங்கம் ஆகியோர் ஓரங்கட்டப்பட்டனர். இது ஒரு புகைச்சலை கிளப்பியது. 

புகைச்சலை மேலும் வீரியமாக்கும் விதமாக, தன் மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கு மிக கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தார் ரஜினி. காரில் மன்ற கொடியை கட்டக்கூடாது! ஆர்பாட்டங்கள் போன்றவற்றை தன்னிச்சையாக அறிவிக்க கூடாது என பலப்பல கண்டிஷன்கள். கழுகுப் பார்வையில் பார்க்கும் போது இவை அருமையான  நிபந்தனைகளாக தெரிந்தாலும் கூட, மக்கள் மன்ற நிர்வாகிகளையும், ரசிகர்களையும், உறுப்பினர்களையும் மிக கடுமையாக கட்டுப்படுத்துவதாய் அமைந்தன. இதனால் ரஜினி மீது ஆதங்கப்பட்டனர் அவர்கள். 

இந்நிலையில் ரஜினியின் மக்கள் மன்றத்தின் நிர்வாக பொறுப்பிலிருந்து பழைய மற்றும் பண வசதி குறைந்தவர்கள் தூக்கி எறியப்பட்டனர். அதற்கு பதிலாக புதிய மற்றும் பணம் படைத்தவர்கள் பொறுப்பிலமர்த்தப்பட்டனர். பதவியிலந்தோர் நியாயம் கேட்டபோது ‘20, 30 வருஷம் மன்றத்தில் இருந்தது மட்டுமே ஒருவருக்கு நிர்வாகியாகும் தகுதியாகி விடாது!’ என்று ஆரம்பித்து, தலைமையை விமர்சிக்கும் நபர்கள் தீய சக்திகள்! என்று போட்டுத் தாக்கிவிட்டார் இளவரசன். 

இதை கேள்விப்பட்டு கொதித்தெழுந்திருக்கும் ரஜினியின் மக்கள் மன்ற நிர்வாகிகள், ரசிகர்கள், தொண்டர்களெல்லாம் இளவரசனை மிக கடுமையாக விமர்சிக்க துவங்கிவிட்டனர்.

கூடவே ரஜினியை நோக்கி ‘என்றுமே நீங்கள் எங்களின் அரசன் தலைவா! ஆனால் கண்ட கிழவரசன்களையும் நிர்வாகத்தில் வைத்து, அவர்கள்  உளறிக்கொட்டி திட்டுவதை கேட்க வைத்தால் நாங்கள் மெளனமாக வெளியேறிவிடுவதை தவிர வேறு வழியில்லை. உங்களை முதல்வராக துடிக்கும் எங்களை அசிங்கப்படுத்திவிட்டாதீர்கள்.” என்று சோஷியல் மீடியாக்களில் போட்டுப் பொளந்து வருகிறார்கள். 

என்ன செய்யப்போகிறார் ரஜினி?

click me!