நழுவி ஓடிய ரஜினி! சோபியா, குட்கா, வாய் திறக்க மறுப்பு!

By manimegalai aFirst Published Sep 6, 2018, 2:18 PM IST
Highlights

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய விஷயம், வெளிநாட்டில் படித்து வரும் மாணவி சோபியா, பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தான் பயணிக்கும் விமானத்தில் வருவதை அறிந்து, விமானத்தின் உள்ளேயே போராட்டம் செய்வது போல் பாஜக கட்சிக்கு எதிராக குரலை உயர்த்தினார்.

இதுகுறித்து தமிழிசை விமான அதிகாரிகளிடம் தெரிவிக்க, இவரை போலீசார் கைது செய்து, பின் ஜாமீனில் விடுவித்தனர். இந்த சம்பவத்திற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலினில் இருந்து சமீபத்தில் அரசியல் கட்சி ஆரம்பித்த கமல்ஹாசன் வரை தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர். பாஜக மற்றும் அதிமுக தலைவர்களை தவிர அனைவரும் சோபியாவுக்கே தங்கள் ஆதரவை தொடர்ந்து தெரிவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் 'தலைவர் 165' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக இன்று ரஜினிகாந்த் உத்தரபிரதேசம் செல்கின்றார். அதற்காக இன்று விமான நிலையம் வந்த ரஜினியிடம் செய்தியாளர்கள் சோபியா விவகாரம் குறித்து கேள்வி கேட்டனர். ஆனால் ரஜினிகாந்த் விஷயம் குறித்து கருத்து கேட்டதற்கு எந்த பதிலும் கூறாமல் மெளனமாக அங்கிருந்து விலகினார். 

விரைவில் அரசியல் கட்சி தொடங்கவுள்ள ரஜினி இதுகுறித்து தனது கருத்தை தெரிவிப்பார் என்றே அனைவரும் எதிர்பார்த்த நிலையில் ஏமாற்றமாக அமைந்தது. அதேபோல் தமிழகத்தில் குட்கா விவகாரத்திற்காக நடைபெற்று வரும் சிபிஐ ரெய்டு குறித்தும் அவர் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
click me!