கட்சி தொடங்குவது உறுதி…. ஆனா எப்பனுதான் தெரியாது !! வழக்கம் போல் சொதப்பிய ரஜினி…

 
Published : Apr 23, 2018, 10:28 PM ISTUpdated : Sep 19, 2018, 02:16 AM IST
கட்சி தொடங்குவது உறுதி…. ஆனா எப்பனுதான் தெரியாது !! வழக்கம் போல் சொதப்பிய ரஜினி…

சுருக்கம்

rajini new party inaguration news

நான் கட்சி துவங்குவது உறுதி ஆனால்  எப்போது துவங்குவேன் என்பதை இப்போது  கூறமுடியாது என்றும் அது தொடர்பான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் நடிகர் ரஜினிகாந்த் வழக்கம் போல் ரசிகர்ளை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் தீவிரமாக அரசியலில்  ஈடுபட்டு வரும் நிலையில், இன்று இரவு மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல உள்ளார். அங்கு 10 நாட்களுக்கு  சிகிச்சை எடுத்துக் கொள்ளும் அவர் பிறகு மீண்டும் சென்னை திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், அமெரிக்கா செல்லும் முன்  போயஸ் கார்டனில் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது சீருடையில் இருக்கும் போலீஸ் காரர்களை தாக்கியது தவறு என்றும் அதே நேரத்தில்  காவலர்களும் சட்டம் கையில் இருக்கு என்று வரம்பு மீறக்கூடாது  என தெரிவித்தார்.

நான் கட்சி தொடங்குவது உறுதி. ஆனால், இன்னும் நாள் உறுதியாகவில்லை என வழக்கம்போல் தெரிவித்த ரஜினிகாந்த், அது தொடர்பான  தேதி பின்னர் அறிவிக்கப்படும் என கூறினார்.

அரசியலில் இறங்கப்பபோவதாக  ரஜினிக்குப் பின் அறிவித்த கமல்ஹாசன், கட்சியின் பெயர், கொடி போன்றவற்றை அறிவித்துவிட்டு மளமளவென போய்க்கொண்டிருக்கும் நிலையில் ரஜினி புதிய கட்சி தொடங்கப் போவது குறித்து அறிவிப்பு வெளியிடாதது அவரது ரசிகர்களிடை  அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் அளித்துள்ளது.

PREV
click me!

Recommended Stories

தேர்தல் செலவுக்கு மண் திருடும் மாஃபியாக்கள்..! ஸ்வீட்பாக்ஸில் கொழிக்கும் அதிகாரிகள்..!
TVK தான் பெஸ்ட் சாய்ஸ்.. கூட்டாக விஜய் பக்கம் சாய்ந்த பன்னீர்செல்வம் மா.செ.கள்