
நடிகர் ரஜினிகாந்த் விரைவில் அரசியல் கட்சி குறித்து அறிவிப்பார் என்ற எதிர்ப்பார்ப்பு மேலோங்கி இருக்கும் சமயத்தில் அவருடைய ஆன்மீக அரசியலை விமர்சனம் செய்யும் சூழல் தற்போது உருவாகியுள்ளது.
அதிகார பூர்வமாக அரசியல் கட்சி துவங்குவது குறித்தும், கட்சி கொடி அறிமுகம் செய்வது பற்றியும் இதுவரை எந்த ஒரு முக்கிய முடிவையும் ரஜினிகாந்த் எடுக்கவில்லை. இதற்கு உதாரணம் சமீபத்தில் "7 பேர் விடுதலை" பற்றி பேசியபோது கூட தான் அரசியலில் இன்னும் முழுமையாக ஈடுபட வில்லை என்றே கூறினார்.
முழு நேர அரசியலில் ஈடுபடவில்லை என்றாலும் தன்னுடைய அரசியல், ஆன்மிக அரசியல் என அடிக்கடி சொல்லி வரும் ரஜினிகாந்த்தின், ரஜினி மன்ற நிர்வாகிகள் மூலம், தொண்டர்களுக்கு இன்று பிரியாணி பொட்டலம் கொடுக்கப்பட்டு உள்ளது என்றால் பாருங்களேன்....
ஆன்மீக அரசியலில் ஈடுபட்டு வரும் ரஜினிகாந்த் தன்னுடைய ரசிகர் மன்ற நிர்வாகிகள் மூலம் பிரியாணி பொட்டிலங்கள் வழங்கியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அரசுக்கு ஆதரவு தெரிவிக்கிறார் ரஜினி என பெரும்பாலான கட்சிகள் யூகித்து, ரஜினி இப்படி தான் என பெரும் அளவில் விமர்சனம் செய்து வருகின்றனர். இந்த தருணத்தில் ஆன்மீக அரசியல் என்றால் இபப்டிதான் இருக்குமோ என்ற அளவிற்கு பிரியாணி பொட்டலம் அமைந்து விட்டது.
இதில் போதாத குறைக்கு...நாளை கார்த்திகை மாதம் பிறக்க உள்ள நிலையில், ஐப்பசி மாத இறுதி நாளான இன்று, ரஜினி மன்ற நிர்வாகிகள் பிரியானி வழங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் ரஜினியின் இரண்டாவது மகள் சவுந்தர்யாவிற்கு மறுமணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. நடிகரும் தொழில் அதிபருமான விசாகனை வரும் ஜனவரியில் திருமணம் செய்துக் கொள்ள உள்ளார் சவுந்தர்யா என தகவல் வெளியாகி உள்ளது. இதற்கிடையில் அதற்கான உபசரிப்பு தான் இந்த பிரியாணி என்றும் விமரசனம் எழுந்து உள்ளது.